மாவட்டத்தின் அபிவிருத்தி நிலையை ஆராய்கின்ற ஓர் கலந்துரையாடல் ஆகும். இக் கூட்டத்தில் தமிழ் தேசியம், சுயநிர்ணயம் பற்றி பேசுவதற்கான ஓர் இடம் அல்ல. அது தொடர்பாக பேசுவதற்குத்தான் பாராளுமண்றம் இருக்கின்றது. அங்கே அது தொடர்பில் அவர்கள் நாட்கணக்கில் பேசலாம், அதை விடுத்து மக்களின் அபிவிருத்தி பற்றி கலந்துரையாடல்களை மேற்கொள்கின்ற பொறுப்பு மிக்க ஆக்கபூர்வமான அபிவிருத்தி குழு கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவதற்கு இடமளிக்க நாம் தயாரில்லை. அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. அதனை ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் நானும் எங்களது அதிகாரிகளும் பார்த்துக் கொள்வோம். வீனாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சரும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை எந்த நேரமும் குற்றம் சாட்டி மக்களுக்கு கிடைக்க வேண்டிய சில அபிவிருத்திகளையும் இல்லாமல் செய்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி கூட்டங்களில் மாத்திரம் கலந்து கொள்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள் என்பதற்காக மக்களுக்கு கிடைக்க இருக்கின்ற ஒரு சில அபிவிருத்திகளையும் இவர்களது தேவையற்ற விவாதங்களால் மக்களுக்கு கிடைக்காமல் செய்பவர்கள் இவர்கள்தான.; மக்களின் அபிவிருத்தி பற்றி சிந்திப்பதற்கு எங்களுக்கு தெரியும், எனவே தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை முதலில் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment