9/25/2011

இந்திய அரசினால் வழங்கப்பட்ட கணணிகள் இன்று உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் இந்திய அரசிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய கணணிகள் வழங்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோகே காந்தா மற்றும் கிழக்கு முதல்வர், கிழக்கு மாகாண ஆளுணர் மொகான் விஜேவிக்ரம, புத்தசாசன பிரதி அமைச்சர் குனவர்த்தன, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாணசபை தவிசாளர் பாயிஸ் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்

0 commentaires :

Post a Comment