9/14/2011

தமிழ்தேசியவாதிகள் ”எந்த தமிழனின் பிரதிநிதிகள்?’









                    ஒரு சமுகத்தின் முழுமையான விடுதலை என்பது அந்த சமுகம் பெறும் அரசியல், பொருளாதாரா விடுதலையை குறிக்கும். ஒன்று பெற்று ஒன்றில் இல்லை என்றால் அது முழுமையான விடுதலை ஆகாது. இது தான் அடிப்படை. இந்த அடிப்படை நோக்கு கூட இல்லாதவர்கள் தான் தமிழ்தேசியவாதிகள். அவர்கள் சொல்லும் தமிழ்தேசியமும் புரிதலற்ற கற்பனையின் இன்னொரு பெரிய பிம்பம்.அதன் அடிப்படை உணர்ச்சிவசபட்டவர்களின் சிதாந்தம் அவர்களின் புதிய குரு தான் சீமான்

 
அரசு, அதிகார வர்கத்தின் ஆதரவும் ஆதிக்க சாதியினர் அதிக பிரதிநித்துவ அதிகார வர்கத்தின் படையின் துப்பாக்கி தலித்களை நோக்கியும் ஏழைகளை நோக்கியும் திரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லபோனால் ஒவ்வொரு ஓட்டுகட்சிகள் தாங்கள் ஆதிக்க சாதி விசுவாசத்தையும் மேட்டுகுடிகளின் ஆதரவு என்பதையும் அவர்களுக்கு உண்மையாக வாலாட்டுபவர்கள் என பெருமையாக ஒவ்வொரு முறையும் காட்டிக்கொள்(ல்)கிறது.
தலித்கள் கொல்லபட்ட சம்பவம் தொடர்ந்து த்மிழ்தேசியம் தான் சர்வரோக நிவரணி என்று புளுகி கொண்டிருந்த்வர்களை நோக்கி மிக முக்கியமான கேள்வி திரும்பியது. எந்த தமிழனின் பிரதிநிதி அவர்கள்? என்பது தான் அதன் சாரம்.இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் திணறி போனார்கள்.
துப்பாக்கி சூடு நடந்து இரண்டு நாள் ஆகியும் தமிழ்தேசியவாதிகள் பெரும் கள்ள மவுனம் காத்தார்கள், மெதுவாக தமிழர்கள் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று முனகினார்கள். சரி கொஞ்ச நாள்களுக்கு கள்ள மவுனம் சாதிக்கலாம் என அமைதியானார்கள். இந்த பிரச்ச்னையில் த்லித் ஆதரவு ஒரு பெரும் கேள்வியென்றால், இதை எதிர்த்தால், இதை நடத்திய ஜேவை இனி ஆதரிக்க முடியாது பாராட்ட முடியது அதனால் தமிழ்தேசியவாதிகள் கையை பிசைந்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.அம்மா தானே தமிழ்தேசியம் அமைத்து கொடுக்க போகிறார்,அவரை எதிர்க்க வேண்டுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
மலேகான் குண்டு வெடிப்பு முதல் எந்த குண்டு வெடிப்பு நடந்தாலும் இது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சதி” என முழுங்கும் அத்வானியை போல், அம்மா ஆட்சியை கெடுக்க மத்திய அரசும் ராவும் செய்த திட்டமிட்ட சதிதான் இந்த தலித்களின் படுகொலை என்று முனகிபார்த்தார்கள். கறி உமிழப்படலாம் என்று மீண்டும் கையை பிசைய தொடங்கினார்கள்.இங்கே தான் பல தமிழ் தேசியவாத குழுக்களின் சீனியர் குருவான சீமான் மேல் கவனம் குவிய ஆரம்பித்து.
தலித் கொலை தாக்குதல்கள் நடந்து முடிந்தவுடனே இதற்க்கு சீமான் என்ன சொல்ல போகிறார் என்று அனைவரின் கவனமும் திரும்பியது. அதே நேரம் ஏன் அனைவரும் சீமானை நோக்கி திரும்புகிறீர்கள் என்று முனகலும் கிளாம்பியது.
தமிழ்தேசிய அரசியல், தமிழ் தேசிய அரசு, த்மிழ்தேசியம் இந்த சொல்லாடல்கள் அணைத்தும் உணர்ச்சியின் மேல்கட்டப்படும் கற்பனை கோட்டைகள். இந்த தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு அந்த ச்முகம் எத்தைகைய விடுதலையை பெறபோகிறார்கள் என்ற தெளிவு நிச்சயம் இருக்காது, நீங்கள் இதைபற்றி கேள்விகேட்டால் ஒன்று ஓடிவிடுவார்கள் இல்லை என்றால் உங்கள் பின்ன்னியை தெரிந்துகொண்டு அவதூறு செய்வார்கள். ஆனால் பதில் மாத்திரம் சொல்லமாட்டார்கள். இதில் ஆரம்பகாலத்தில் வரும் இந்த உண்ர்சியை தூண்டிவிட்டு கூட்டம் சேர்பதில் இப்பொழுது இருக்கும் அனைத்து த்மிழ்தேசிய த்லைவர்களில் சிறந்த்வர் சீமான்.அத்னால் த்மிழ்தெசியம் பேசிய சில நாட்களிலேயே ஒரு பெரிய கூட்ட்த்தை அவரால் காட்ட முடிந்த்து.
சீமான் பேசினால் அவருக்கென்று ஒரு இளைஞ்ர் கூட்டம் கூடும், அவர்களை உணர்ச்சிவசப்பட செய்து போராட் அழைப்பார்.பாபர் மசூதியை இடிக்க வைத்த அதே உணர்ச்சிவச அரசியல் அதே மாதிரி உண்ர்ச்சிவசபட செய்வது, அதை தூண்டுகிற மாதிரி பேசுவது எனும் பார்பன பாஸிச இந்துத்துவ வெறி அரசியல் அச்சு காப்பி தான் இந்த சீமான். பின்நாட்களில் இதில் விற்பனர்களான தாக்கரெவையும், மோடியையும் சீமான் புகழ்ந்த்தில் எந்த வித ஆசரியமும் இல்லை.
இப்படி உணர்ச்சி அரசியல் செய்யும் ஒருவர் அதே நேரம் இன்னொரு அரசியலாயும் செய்ய தொடங்கினார். சாதி பாசத்துடன் பசும்பொன் முத்துராமிலிங்க தேவரை வணங்கினார், கேட்டால் நான் இம்மானு வேல சேகரனையும் வணங்குகிறேன் என்றார். என்னை கேட்டால் நீ ஏன் இருவரையும் வணங்காமல் பொது அரசியல் செய்யவில்லை? தன் சாதிக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என கேட்க போனவரும், தன் முன்னால் சரிக்கு சம்மாக பேசுகிறான் அதனால் அவனை கொல்லுங்கள் என்று சொன்னவரும் ஒன்றா? ஆனால் இதற்க்கு சீமான் நம்மை நோக்கி பசும்பொன் முத்துராமிலிங்க தேவர் ஒரு போராளி என்றார். யாருக்காக? என்பது தான் நம கேள்வியும்.
இப்படி சிதாந்தம் இல்லாத உணர்ச்சி அரசியலையும் அதற்க்கும் கீழான சாதி அரசியலையும் செய்யும் சீமானை இதர கத்துகுட்டி தமிழ் அமைப்புகள் கேள்வி கேட்கவில்லை ஏனென்றால இவர்களும் த்லித்கள் என்ற சமுக பார்வையும் அரசியல் சித்தாந்த்மற்ற வெத்துவேட்டுகள். சீமானை கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் இவர்கலை நோக்கி அதே கேள்வி வந்தால் , சீமானை விட அதிவேகமாக அம்பலமாகிவிட வாய்புள்ளது.
சீமான கடந்த காலங்களில் பாடிய அம்மா புகழ் குறிப்பிடத்க்கது, ஆதிமுக காரர்கள்களை விட அம்மாவை அதிகம் பாராட்டி கூட்டம் போட்டவர்கள் நாம் தமிழர் அமைப்பினர் தான். அம்மாவின் வெற்றிக்கு பாடு படுபவர்காளாகவும் அதன் மூலம் அம்மா தமிழ்தேசியம் அமைத்துக்கொடுப்பார் என்று வாய் கூசாமல் கூறினவர்கள். இதையெல்லாம் வைத்தும் சீமான இந்த தலித் கொலைகளுக்கு என்ன சொல்ல போகிறார் என்று ஆவல் அதிகரித்து.இரண்டு நாள் ஆகியும் கள்ள மவுனம்.
நன்றி 
அக்னி பார்வை

0 commentaires :

Post a Comment