9/10/2011

தொழிற்பயிற்சிக்காக இந்தியா செல்லும் அணியினருடன் முதல்வர் கலந்துரையாடல்.

  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியின் பயனை கிழக்கு மாகாணத்தில் கணவனை இழந்திருக்கின்ற பெண்களுக்கு தொழிற்பயிற்சிகளை இந்திய அரசின் சேவா அமைப்புடன் இணைந்து வழங்குவதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக பிரதான பயிற்சியாளர்களை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து பல்வேறு தொழிற்பயிற்சி நெறிகளை போதிக்க இருக்கின்றார்கள்.
இவ்வாறாக தொழிற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக செல்கின்ற பிரதான பயிற்சியாளர்களை முதல்வர் சந்தித்து கலந்துரையாடுவதனை படத்தில் காணலாம்

0 commentaires :

Post a Comment