9/09/2011

வாகரை பிரதேச அபிவிருத்திகுழு கூட்டம்

மேற்படி அபிவிருத்தி குழு கூட்டமானது பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி தலமையில் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் தொடர்ந்து வழிநடத்தி செல்லப்பட்டது. கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி தொடர்பாக கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம்,  மாசிலாமனி மற்றும் வாகரை பிரதேச தவிசாளர் கணேசன்,
திணைக்கள பொறுப்பதிகாரிகள், பாதுகாப்பு பொறுப்பதிகாரிகள் மற்றும் கிராமியகுழுத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment