பிரான்ஸ் ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் பிரான்சில் செயற்படும் நெடியவனின் அமைப்பான ரிசிசியின் ஏற்பாட்டில் தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடைபெற்றதாக சுவிசைத் தளமாகக் கொண்டியங்கும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாட்டில் பங்கு கொள்வதற்காக பிரான்சிற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீகாந்தாவையும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப சந்திப்பாக இந்த சந்திப்பு பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
திரு.கஜேந்திரகுமாரும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாட்டில் பங்கு கொள்வதற்காக பிரான்சிற்கு விஜயம் செய்திருந்தபோதும் இறுதியில் இந்த மாநாடு கே பி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டமையால் தான் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டு இணையத்தளம் ஒன்றிற்கு செய்தி வழங்கிருந்தார். இந்தச் சந்திப்பில்; நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா ஆகியோருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், உலகத்தமிழ் பேரவையின் தலைவரான அருட்திரு இம்மானுவேல் அடிகளார், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த நெடியவன் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு நடைபெற்ற சந்திப்பில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிகாந்தா ஆகியோரை இணைத்துக்கொள்வது தொடர்பாக இணக்கம் காணப்பட்ட நிலையில் சிறிதரன், சிறிகாந்தா, ஆகியோர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி *சலசலப்பு
0 commentaires :
Post a Comment