9/13/2011

ஆட்கடத்தல் முறியடிப்பு: இலங்கை கடற்படையினருக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

இலங்கையர்கள் 44 பேர் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கெத்தி குளுக்மன் பாராட்டி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படை யினர் இணைந்து சட்டவிரோத ஆட்கடத்தல் முறியடிக்கப்பட்ட நிகழ்வை
அவுஸ்திரேலியா வரவேற்கிறது.
2009 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை எந்தவொரு படகும் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவை வந்தடையவில்லை.
ஆட்கடத்தல்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்காக தம்மாலான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களும் இதனை நம்பி தமது பணத்தை இழந்து விடுகிறார்கள்.
இவ் ஆட்கடத்தல் காரர்கள் இலாபத்தை மாத்திரமே குறியாகக் கொண்டு செயற்படுகிறார்கள். இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் படகுகளை நம்பி மக்கள் தமது உயிர்களையே இழந்துள்ளனர்.
மக்கள் தமது பணத்தையும் வாழ்வையும் ஆட்கடத்தல் காரர்களின் கைகளில் ஒப்படைக்கிறார்கள் என்றும் உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
ஆட்கடத்தலினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை விளக்கும் வகையில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா வரவேற்கிறது.
2009 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை எந்தவொரு படகும் சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலி யாவை வந்தடையவில்லை.
ஆட்கடத்தல்காரர்கள் பணம் சம்பாதிப்பதற் காக தம்மாலான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களும் இதனை நம்பி தமது பணத்தை இழந்து விடுகிறார்கள்.
இவ் ஆட்கடத்தல் காரர்கள் இலாபத்தை மாத்திரமே குறியாகக் கொண்டு செயற்படுகிறார்கள். இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் படகுகளை நம்பி மக்கள் தமது உயிர்களையே இழந்துள்ளனர்.

0 commentaires :

Post a Comment