கிழக்கு பல்கழைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்த வைத்திய பீடத்திற்கான உபகரணங்கள் மற்றும் வாகனம் என்பன இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோகே காந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுணர் மொகான் விஜேவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் , உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் நவரெட்ண, கிழக்கு பல்கழைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார், முதல்வரின் ஆலோசகர் கலாநிதி விக்னேஸ்வரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். மேற்படி கற்கை நெறிக்கான உபகரணங்கள், புத்தகங்கள் என்பன உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் நவரெட்ன அவர்களிடம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோகே காந்தா அவர்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment