ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66 வது வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் வட பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணியில் அரசாங்கத்தின் முன்னேற்றம் பற்றி உலக தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு அவரை சந்திப்பதற்கு வருகின்ற உலக தலைவர்களுக்கும், ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் சந்திக்கும் உலக தலைவர்களுக்கும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர் வாழ்வு நடவடிக்கைகள், மீள்குடியேற்றப் பணிகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் என்பன தொடர்பாக விளக்கமளித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 66 கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் நகருக்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திப்பதற்கு வருகை தந்த சகல வெளிநாட்டு தலைவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து ஆதாரபூர்வமாக விளக்கிக் கூறினார்.
கடந்த 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்க வந்த ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாத், நேபாள பிரதமர் கலாநிதி பாபுராம் பற்றாய், கொலம்பிய ஜனாதிபதி ஜூவான் மெனுவால் சென்வோஸ் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து, பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
ஜனாதிபதி அவர்களை சந்தித்த வெளிநாட்டு தலைவர்கள் இலங்கையினை தற்போது சீரான முறையில் நிர்வகித்து வருகின்றமை தொடர்பாகவும் நாட்டுப் பிரச்சினைகளை துரித வேகத்தில் தீர்த்து வருவதற்கு காட்டி வரும் ஆர்வம் குறித்தும் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
நேபாள பிரதமர் பதவியை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட பாபுராம் பற்றாய் நேபாளத்திற்கு விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அனுமதி கோரினார்.
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உல்லாச பயணத்துறையின் முன்னேற்றம் பற்றியும் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்திய வெளிநாட்டு தலைவர்கள், இலங்கையுடன் இணைந்து உல்லாச பிரயாணத்துறையை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பறிமாறிக் கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த கொலம்பிய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் எடுக்கும் முயற்சிகளை தாம் பெரிதும் பாராட்டுவதாக கூறினார்.
நேபாளம், கொலம்பியா, ஈரான் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (21) நேபாளம், கொலம்பியா, ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதி அவர்கள், இலங்கையில் இடம்பெயர்ந்தவர் களை மீளக் குடியமர்த்துதல், புனரமைப்பு பணிகள், வடக்கு கிழக்கில் மிதி வெடிகளை அகற்றுதல் ஆகிய பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், நாட்டில் ஆரம்பித்துள்ள பாரிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
நேபாள பிரதம அமைச்சர் கலாநிதி பாபுராம் பஹட்ராயுடன் (Dr. Baburam Bhattarai) நடைபெற்ற கலந்துரையாடலின் போது கொழும்புக்கும் லும்பினிக்குமிடை யில் நேரடி ஸ்ரீலங்கன் விமான சேவை யொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இளம் உறுப்பினராக இருந்த காலம் முதல் லும்பினியை மேம்படுத்துவதற்காக தீவிர அக்கறைகாட்டினார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்குமிடையில் வர்த்தகத்தையும் உல்லாசப் பயணத்துறையை யும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி இதன் போது இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த நேபாள பிரதம அமைச்சர் இலங்கை தெற்காசியாவில் ஆக்கபூர்வமான அபிவிருத்திக்கு ஒரு சிறந்த உதாரணம் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை ஜனாதிபதிக்கும் கொலம்பியா ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. கொலம்பியா முகம்கொடுத்த நிலைமைகளின் மத்தியில் இலங்கையின் சூழல் தொடர்பாக சிறந்த முறையில் தம்மால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் வெற்றிகரமாக செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலங்கை தற்பொழுது சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பதையும் இதன் போது கொலம்பியா ஜனாதிபதி ஜுவான் மெனுவல் சென்டொஸ் கல்டரோன் (Juan manuel Santos Calderon) தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதி மஹமூட் அஹமதிநெஜாட் (Mahmoud Ahmadinejad) அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஈரான் ஜனாதிபதி துரித அபிவிருத்திக்கு நாட்டை இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்குகின்ற தலைமைத்துவத்தை தான் மதிப்பதாகத் தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதியுடன் நடைபெற்ற அந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :
Post a Comment