தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் 40 பேர் அடுத்தமாதம் கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
முதலாவது தொகுதியினர் எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் நாடு திரும்பவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராசிக் தெரிவித்தார். 2011ம் ஆண்டில் மாத்திரம் இந்தியாவின் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரத்து 748 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் விமானங்கள் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.
இனிமேல் இவர்களை கப்பலில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதன் பின்னர் இலங்கை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2007ம் ஆண்டு முதல் இதுவரை 7 ஆயிரத்து 619 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடு திரும்ப விரும்புபவர்களுக்கான பிரயாணப் பத்திரம் மற்றும் பயணச்சீட்டு என்பன யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பால் வழங்கப்படுவது என அவர் குறிப்பிட்டார்.
தமிழக முகாம்கிலுள்ள மேலும் பலர் நாடு திரும்புவதற்கு ஆர்வமாக உள்ளனர். இவர்கள் கப்பல் மூலம் நாடு திரும்பினால் தம்முடன் 100 கிலோ கிராம் எடையுள்ள பொருட்களை எடுத்துவர முடியுமென ராசிக் தெரிவித்தார்.
நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவ துடன், அரசாங்கத்தால் நிவாரணம் வழங்கப்படுகிறது. சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கான தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட உதவிகள் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை; தமிழகத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக வரும் இலங்கை தமிழர்களை கப்பல் மூலம் வருமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கப்பல் மூலம் வரும் போது தமது வீட்டு உபயோக பொருட்களையும் எடுத்து வர முடியும்.
விமானத்தை விட அதிகளவு எடைகொண்ட பொருட்களை எடுத்துவர முடியும். வருடக் கணக்காக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் இலங்கை வரும் போது, தமது வீட்டுப யோக பொருட்களையும் எடுத்துவர கப்பல் பிரயாணம் வசதியாக இருக்கும் என்பதாலேயே இவ்வாறு தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக கூறினார்.

0 commentaires :
Post a Comment