9/10/2011

காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேச சபைகள்: குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு



காத்தான்குடி நகர சபை மற்றும் ஆரையம்பதி பிரதேச சபை பிரிவுகளில் குப்பை கொட்டுவது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்கு மட்டக்களப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போது தீர்வு காணப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் நேற்று முன்தினம் 08-09- 2011 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசாந்தன், முபீன் பரீட், மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், காத்தான்குடி, நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபைகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், காத்தான்குடி, மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது இப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டது.
இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
எதிர்வரும் மூன்று மாத காலங்களுக்கு ஆரையம்பதி பிரதேச சபைப் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்திலுள்ள காணியொன்றில் காத்தான்குடி நகர சபை குப்பைகளை கொட்டுவது எனவும் குப்பைகளை காத்தான்குடி நகர சபை நிரந்தரமாக கொட்டுவதற்கான காணியொன்றை காத்தான்குடி நகர சபை மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவில் அடையாளம் கண்டுள்ளது.
இக்காணியில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்ள பொருத்தமான இடமா என்பதை பரிசீலிப்பதற்காக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு வொன்று அமைக்கப்பட்டது.
இக்குழு இது தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 19 ம் திகதி சமர்ப்பிக்குமெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இக் குப்பை பிரச்சினை தொடர்பாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment