9/21/2011

முதலமைச்சர் சந்திரகாந்தனின் வழிகாட்டலில் துரித அபிவிருத்தி காணும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டம் துறை ரீதியான அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான உற்பத்தியான விவசாயம், மீன்பிடி, பால்உற்பத்தி என்பன கடந்த ஆன்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டில் பால் உற்பத்தியானது ஒரு நாளைக்கு 7700லீற்றர் பெறப்பட்டது. ஆனால் இவ்வருடம் ஒரு நாளைக்கு 13,500லீற்றர் பெறப்படுகின்றது. அதே போல் விலையிலும் அதிகரிப்பு காணப்படுகின்றது.
கடந்த வருடம் ஒரு லீற்றர் பாலின் விலை 36ரூபாயாக இருந்தது. இவ் வருடம் 56ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் மடம்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பண்னையாளர்கள் தங்களது வாழ்வாதார மட்டத்தில் உயர்வு மட்டத்தினை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
         
அதேபோன்று நெல் உற்பத்தியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ் வருடம் பாரிய அதிகரிப்பு தென்படுகின்றது. விசேடமாக சிறுபோக உற்பத்தியினை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டில் சிறுபோகத்தில் 86,367மெற்றிக்தொன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  இவ் வருடம் சிறுபோகத்தில் 108,510 மெற்றிக்தொன் நெல் உற்பத்தி பெறப்பட்டுள்ளது. அதேபோன்று விலையிலும் அதிகரிப்பு காணப்படுகின்றது. அவ்வாறே மீன்பிடி துறையிலும் பாரிய அபிவிருத்தி தென்படுகின்றமை விசேட அம்சமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ் வருட அபிவிருத்திக்காக மொத்தமாக 3,560வில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2200வில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இதில் விசேட திட்டங்களான நெல்சிப், ஜெய்கா, மீளெழுச்சி திட்டம் என்பவற்றிக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்திலே யுத்தத்தினாலும் வன்முறையினாலும் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் ஆகும். இம் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
விசேடமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் , பாராளுமன்ற பிரதி அமைச்சர்கள்;, மாகாணசபை உறுப்பினர்கள்,, பிரதேச தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகஸ்த்தர்கள் என அனைவரினது கூட்டு முயற்சியே இவ் அபிவிருத்திக்கு காரணமாகும் என்பதும் நினைவு படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

0 commentaires :

Post a Comment