9/13/2011

வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு கிழக்கு முதல்வரினால் கணணிகள் வழங்கி வைப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்;சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின்  வேண்டுகோளுக்கமைய இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கணணிகளில் ஒரு தொகுதி கல்குடா வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்று கிழக்கு முதல்வரினால் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலாளர் கிரிதரன், பிரதேச தவிசாளர் உதயஜீவதாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment