கடந்த 16ந் திகதி மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த விளையாட்டத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்வரும் ஆண்டு நவீன முறையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் நிர்மானிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் ஹோட்டலில்(மட்டக்களப்பு ரெஸ்ட ஹவுஸ்) இடம்பெற்றது. இதில் முதலமைச்சர் சந்திரகாந்தன் உரiயாடும் போது, மட்டக்களப்ப மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது. இதனை கட்டாயம் நவீன முறையில் நிர்மானிக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டதற்கிணங்க எதிர் வரும் 2012ம் ஆண்டு சுமார் 170 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எது எவ்வாறாயினும் இவ்வளவு காலமும் கவனிப்பாரற்று கிடந்த வெபர் விளையாட்டரங்கு முதலமைச்சரின் காலத்தில் புதுப்பொலிவு பெறப்போவது மட்டக்களப்பு மாவட்டமக்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.
0 commentaires :
Post a Comment