ஆயுத போராட்டத்தின் நேரடி பங்காளிகள் ஜனநாயகம், அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற இவ்வேளையில,; போராட்டத்திற்கோ தமிழ் மக்களின் அபிவிருத்திக்கோ எந்த பங்களிப்புமே செய்யாத ஒரு சில அடிவருடிகள் தற்போது தாங்கள்தான் தமிழீழம் பெறப்போவதாகவும், தமிழ் மக்களின் அபிவிருத்திகள் பற்றி சிந்திப்பதாகவும் அவர்களின் நலன்பற்றி பேசுவதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதனை நினைக்கும் போது வேதனையளிக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்தார்.
கையிலே ஆயுதங்களையும், கழுத்திலே நஞ்சையும் சுமந்து களத்திலே போராடி தியாகம் செய்த அனைவருமே தற்போது தமிழ் மக்களின் எதிர்காலம், அவர்களின் அபிவிருத்தி பாதை மற்றும் ஏனைய தேவைகள் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் போராட்டத்தின் வலியை நேரடியாக உணர்ந்தவர்கள் அவர்கள்தான். ஆனால் போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு எம்பிக்கள் மற்றும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்ற மேலாதிக்கத்தலைவர்கள் இவர்கள்தான் தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அப்போது களத்தில் போராடும் போது இவர்கள் என்ன செய்தார்கள், இவர்களது பிள்ளைகள், உறவினர்கள் எங்கிருந்தார்கள் என நான் கேட்கின்றேன், எங்கேயோ இருந்து கொண்டு அழிவுக்கான பாதையை பலப்படுத்தி கொண்டு சென்றார்களே தவிர மக்களது ஆக்கபூர்வமான அபிவிருத்தி மக்களின் எதிர்காலம் பற்றி சிறிதளவேனும் இவர்கள் சிந்திக்கவில்லை. அப்போது இவர்கள் சிந்தித்து இருந்திருந்தால் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள் பேராட்டம் முடிந்துவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேளிவிக்குறியாகிவிடுமே ஆதலால் அவர்கள் எங்களது மக்கள் தொடாந்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் அப்போதூன் அவர்களும் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவின்hகள் வெளிநாடுகளில் சொகுசாக வாழமுடியம் என்பதனை உணர்ந்து செயற்பட்டார்கள். என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலபுனந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது கிழக்கு மாகாணம் அதீத அபிவிருத்தி கண்டுவருகின்றது. கிழக்கு மாகாண சபை அமையப்பெறுவதற்கு முன்னர் எமது மாகாணம் துறைசார்நத அபிவிருத்திகளில் கடைசியாக இருந்தது. ஆனால் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்தான் தற்போது கிழக்கின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அங்கே மிகவும் பயங்கரமான சூழல் காணப்படுகின்றது என பொய்ப்பிரச்சாரம் செய்து தங்களின் இருப்பை தக்கவைக்க ஒருசிலர் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் நினைப்பததைப் போன்று நாங்கள் சிந்திக்கத் தேவையில்லை. எங்களுக்கு கிடைத்திருக்கின்ற இந்த அரியசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்துவந்த கஸ்டங்கள் மற்றும் இழப்புக்களை ஈடுசெய்ய நாம் உழைக்க வேண்டும். மாறாக எங்கேயோ இருந்து கொண்டு எங்களை ஆளநினைக்கும் அந்தக் கூட்டத்திற்கு சரியான பாடத்தினை நாம் புகட்ட வேண்டும்.
மக்களே நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் வடமாகாணத்தினைப் போன்று தனியான தமிழ் மக்கள் வாழ்கின்ற மாகாணமா எமது கிழக்கு மாகாணம் நிச்சயமாக இல்லை. பூகோள ரீதியாகவும் இனரீதியாகவும் மூவினங்களுடனும் ஒன்றாக இணைந்துதான் வாழவேண்டும். ஆகவே எங்களது மாகாணத்திற்குள் நாம் இனரீதயாகவோ அல்லது மதரீதியாகவோ அடிபட்டுக் கொள்ளத் தேவையில்லை அது சாத்தியமும் இல்லை. அவ்வாறு ஏதும் நிகழுமாயின் எமது மாகாணத்திற்குத்தான் அது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
எமக்கென்ற தனியான மாகாணசபை அமையப்பெற்றிருக்கிறது. இதனூடாக இயலுமானவரை நாம் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அதிகாரங்கள் பற்றிப் பேசுவோம். மாறாக அரசுடன் முரண்டுபிடித்துககொண்டு கிடைக்க இருக்கின்ற அபிவிருத்திகளையும் தடுத்து நிறுத்தி மீண்டும் மீண்டும் அவர்களை பாதிப்புக்குள்ளாக்குவதற்கு நாம்; தயாரில்லை. ஒருசில சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது இளைஞர்களை சூடேற்றி அவர்களை உணர்ச்சிவசப்படுத்தி வன்முறைகளில் ஈடுபடதூண்டிவிட்டு பின்னர் அவர்களை பொலிஸ் கைது செய்த பின்னர் பத்திரிகைகளில் அறிக்கைவிடுவது. இவர்களால் அந்த இளைஞர்களை வெளியில் கொண்டுவரமுடியாது. அப்போது அந்த இளைஞர்கள் அவர்களது குடும்பங்கள்தான் பாதிக்கப்படும். பாருங்கள் தங்களது சுயநலன்களுக்காக இளைஞர்களை பலிக்கடாவாக்குகின்றார்கள். இதுதான் கடந்த காலங்களிலும் இடம்பெற்றது. அதன் விளைவுகளை நேரடியாக நாம் அனுபவித்தவர்கள் என்ற அடிப்படையில் இது தொடர்பில் சற்று ஆழமாக சிந்தித்து நாங்களே எங்களது மாகாணங்களை ஆள்வதற்கு இடம்கொடுக்க வேண்டும.; மாறாக வடக்கிலிருந்து கொண்டோ அல்லது வெளிநாடுகளில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்கின்றவர்கள் எங்களை வழப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக் கூடாது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதல்வரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜா மற்றும் பாடசாலை அதிபர், கிராம சேவையாளர், பிரதேசசபை உறுப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment