வாழைச்சேனை அபிவிருத்திகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தற்பொழுது வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதிபெறல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன், துரைரெட்ணம் மற்றும் கிழக்கு மாகாணசபை முதல்வரின் பிரதி செயலாளர் தயாழன், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கிரிதரன் மற்றும் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் உதயஜீவதாஸ், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், கிராமத் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment