9/10/2011

ஜேர்மன் பதில் உயர்ஸ்த்தானிகர் கிழக்கு முதல்வருடன் சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் ஜேர்மன் பதில் உயர்ஸ்த்தானிகர் ‘மரிஜா சேகா எனிக் கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் பி.ப 03.00மணிக்கு இடம் பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் விசேடமாக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமை மற்றும் ஜேர்மன் அரசினால் கிழக்கு மாகாணத்தில் தொழில்பயிற்சி நிலையங்களை நிறுவுதல் இதனூடாக இளைஞர் யுவதிகளின் திறன் விருத்தியை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும் எதிர்காலத்தில் இவ்வாறான தொழில்பயிற்சி நிலையங்களை ஜேர்மன் அரசின் உதவியுடன் கிழக்கில் அமைப்பது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

0 commentaires :

Post a Comment