9/09/2011

வாகரை கோட்ட பாடசாலைகளுக்கு முதலமைச்சரினால் கணணிகள் அன்பளிப்பு.

கல்குடா வலயத்தில் வாகரை கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கணணி வழங்கும் நிகழ்வு இன்று (08.09.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலமையில் வாகரை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்றது. வாகரை கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கிழக்கு முதல்வர் கணணிகளை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திவியம் மற்றும் பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி மற்றும் வாகரை கோட்ட கல்வி அதிகாரி குணலிங்கம், பாடசாலை அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment