9/08/2011

மீன்பிடியை நவீன முறையில் மேற்கொள்வதற்கான முதலமைச்சரின் விசேட திட்டம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மீன்பிடி தொழிலை நவீனப்படுத்தும் புதிய செயற்த்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். இதன் முதற்கட்ட ஆரம்ப கூட்டம் நேற்று (06.09.2011) பேத்தாழை இறங்குதுறை கட்டடத்தில் முதலமைச்சர் தலமையில் மீனவ சங்கப்பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் இடம் பெற்றது. எமது மாகாணத்திலே கடல் எல்லையானது ஏனைய மாவட்டங்களை விட மிகவும் நீண்ட பிரதேசமாகும். இது இயற்கை  எமக்கு கொடுத்த கொடை, இதனை நாம் சரியாக பயன்படுத்தி எமது பிரதான தொழில்களில் ஒன்றாக விளங்குகின்ற பீன்பிடியை அதிகரித்து  எமது பொருளாதாரத்தையும் அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக மீன்பிடி தொழிலை நாம் பாரம்பரிய முறையிலே மேற்கொண்டு வருகின்றோம். இதனை தவிர்த்து புதிய பல நவீன மீன்பிடி உபகரணங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியை மேற்கொண்டால் எமது வருமானத்தையும் பன்மடங்காக அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார். இதற்காக தெரிவுசெய்யப்பட்ட மீனவர்களுக்கு கிழக்கு மாகாணசபையினூடாக பயிற்சிநெறி வழங்கப்பட இருக்கின்றது. முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கு அதாவது பேத்தாழை, கல்குடா, களுவங்கேனி, சவுக்கடி, செட்டிபாளையம், பனிச்சங்கேனி, வாகரை போன்ற பிரதேச மீனவர்களுக்கு இப்பயிற்சிநெறி வழங்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து கிழக்கு மாகாணம் பூராகவும் இப் பயிற்சி நெறி மேற்கொள்ளப்பட்டு  எமது மாகாணத்தில் மீன்பிடி மூலம் பெறப்படும் வருமானத்தையும் அதிகரித்து கொள்ள முடியும். இவ் ஆரம்ப கூட்டத்தில் மட்க்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள உத்தியோகஸ்த்தர் ஜோர்ச், கிழக்கு மாகாண முதலமைச்சரின் திட்டமிடல் அதிகாரி; கௌரிதரன், மற்றும் செட்டிபாளையம், சவுக்கடி, களுவங்கேனி, கல்குடா, பேத்தாழை, பனிச்சங்கேனி, வாகரை போன்ற பிரதேச மீனவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment