9/07/2011

மன்மோகன் வங்கதேச விஜயம்

தாக்காவில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்தியப் பிரதமர்  மன்மோகன் சிங்இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசத் தலைநகர் தாக்கா சென்றிறங்கியுள்ளார்.
12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஒருவர் வங்கதேசம் செல்வதாக அமைந்துள்ள இப்பயணம் இருநாடுகளான உறவில் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இந்தியா சற்று கலக்கமடைந்துள்ளது என்பதும் வங்கதேசத்துடனான உறவில் அது புதிதாக ஆர்வம் காட்டுவது ஒரு பங்கில் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகம், எல்லைப் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் வங்க தேசத்துடன் நிறைய ஒப்பந்தங்களில் அடுத்த இரண்டு நாட்களில் மன்மோகன் சிங் கையெழுத்திடவுள்ளார்.
மன்மோகன் சிங்கின் இந்த விஜயத்தின்போது எல்லை தொடர்பான விஷயத்தில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் வராதா என்று இந்திய -வங்கதேச எல்லைப் பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் எனக் கூறலாம்.

ஒருவர் நிலப்பரப்பில் மற்றவர் இடம்

இந்திய நிலப்பரப்பில் அமைந்திருந்தாலும் அரசியல் ரீதியில் வங்கதேசத்துக்கு சொந்தமான 51 துண்டுப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர். அதேபோல இந்தியாவுக்கு சொந்தமான கிட்டத்தட்ட நூறு இடங்கள் வங்கதேச நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
இவ்வாறு மற்றவருடைய நிலப்பரப்பில் வாழும் ஒரு நாட்டுமக்களுக்கு எவ்விதமான அரசாங்க உதவிகளும் வசதிகளும் கிடைப்பதில்லை. யதார்த்தத்தில் நாடற்ற நபர்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அடுத்தவர் நிலப்பரப்பில் உள்ள தமக்கு சொந்தமான இடங்களை அடுத்தவருடன் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்ததை தற்போதைய சந்திப்பின்போது இவ்விரு நாடுகளின் பிரதமர்களும் இறுதிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவர் மற்றவரின் போக்குவரத்துக் கட்டமைப்பை பயன்படுத்துதல்

தவிர வங்கதேசத்துக்கு அப்பால் உள்ள இந்திய மாநிலங்களுக்கு வங்கதேசத்தின் சாலை மற்றும் ரயில் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை அனுப்புவதற்கு அனுமதி பெறுவது தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் வங்கதேசத் தலைவருடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது.
பிரதிபலனாக, நேபாளத்துடனும் பூடானுடனும் வங்கதேசம் வர்த்தகம் செய்ய இந்திய நிலப்பரப்பை பயன்படுத்திக்கொள்ள அது இந்தியாவிடம் அனுமதி கோரும் என்று தெரிகிறது.

0 commentaires :

Post a Comment