ஏறாவூர் பற்று பிரதேசசபை செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் சிதம்பரம்பிள்ளை வினோத் உத்தியோக பூர்வமாக இன்று (05.09.2011) கடமையை பொறுப்பேற்றார். ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜீவரங்கன் தவிசாளராக இருந்தார். அவர் தனது தனிப்பட்ட ஒழுங்கினம் காரணமாக கட்சியின் தலமைப்பீடத்திலிருந்து குறித்த தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு அப்போது பிரதி தவிசாளராக இருந்த சி.வினோத் அவர்கள் தற்போது தவிசாளராக கடமையேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment