தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வையோ அல்லது அவர்களின் எதிர் காலம் பற்றியோ சிந்திப்பதில்லை.இவ்வளவு காலமாகியும் கிழக்கு மாகாணத்திற்கு ஏதாவது முக்கிய பதவிகளை வழங்கியதுண்டா? சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் சிந்தித்துத்தான் இப்போது நல்லதொரு முடிவை எடுத்திருக்கின்றோம். சிந்திக்காமல் செயற்படுகின்ற தமிழ்; தேசிய கூட்டமைப்புடன் இருந்து மக்களுக்காக எதுவுமே செய்ய இயலாது என்பதனை நன்கு உணர்ந்துதான் நாங்கள் தற்போது கட்சி மாறி இருக்கின்றோம். இன்னும் பலர் எங்களைப் போல் கட்சி மாற இருக்கின்றார்கள். எனவே மக்கள் தொடர்ந்தும் த.தே.கூட்டமைப்பினரை நம்பி இருக்க வேண்டாம் என நாங்கள் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என கட்சி மாறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப் படுத்துகின்ற மிகவும் பழமை வாய்ந்த கட்சி தொண்டர்களும் முன்னைநாள் பிரதேச மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் தெரிவிக்கின்றார்கள்.
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment