நாட்டின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிம், நேபாள நாட்டு எல்லைப் பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
இதன் தாக்கத்தால் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகாரில் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டில்லியில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. நேபாளம், திபெத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது.
பூகம்பத்தின் மையம் அருகே இருந்த சிக்கிமின் வடக்கு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. சுமார் 1000 கட்டடங்கள் தரை மட்டமாகிவிட்டன.
1 இலட்சம் வீடுக ளின் விரிசல்கள் ஏற்பட்டது. மாநில தலைமைச் செயலக கட்டடமும், அதன் அருகே உள்ள பொலிஸ் நிலைய கட் டடமும் சேதம் அடைந்தன.
டீஸ்டா ஆற்றங்கரையில் உள்ள பல கிராமங்களில் பெரும்பாலான வீடுகள் இடிந்து தரை மட்டமாகிவிட்டன. மேற்கு வங்காளத்தை யும், சிக்கிமையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் மலைப்பாதையில் 10 கி.மீ. தூரத்தில் 20 இடங்களில் நிலசரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பூமி அதிர்ச்சிகள் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் படுத்து தூங்கினர்.
மழையால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் மீட்பு பணியில் சிக்கிம் பொலிஸார் தீயணைப்புப் படையினர், பொது மக்களுடன் 5 ஆயிரம் இராணுவத்தினரும், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 750 பேரும் ஈடுபட்டுள்ளனர். 9 இராணுவ ஹெலிகொப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருப்பவர்களையும், சடலங்களையும் மீட்கின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மோசமான வானிலை காரணமாக கேங்டாக் வந்து சேர முடியவில்லை. நிலச்சரிவால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களுக்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.
மலைப் பாதையில் சென்ற பஸ் ஒன்று இடிபாடுகளில் சிக்கி புதைந்தது. மீட்புக்குழுவினரால் அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. அதில் பயணம் செய்த 8 பேர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிடும் இராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.எல். நரசிம்மன் தெரிவித்தார். சிக்கிமில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள்.
பூகம்பத்தால் மேற்கு வங்கத்தில் 9 பேரும், பீகாரில் 7 பேரும் இறந்துவிட்டனர். இவர்கள் தவிர நேபாளம் மற்றும் திபெத்தில் தலா 7 பேரும் பலியானார்கள்.
இதையடுத்து பூகம்பத்தால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
பூகம்பத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 இலட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 இலட்சமும் வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். பூகம்பத்துக்கு பலர் பலியாகி உள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்கள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ் டிராவில் நேற்று முன்தினம் காலை இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் லத்தூர், பார்பானி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை 6.20 க்கு இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஏற்கனவே சிக்கிம் பூகம்ப செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.9 புள்ளியாக பதிவாகி இருந்தது. இது உஸ்மானாபாத், சோலாபூர் மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வால் உயிர் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 1993 ஆம் ஆண்டு லத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் கில்லாரி நகரமே தரை மட்டமானது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏராளமானவர்கள் பலியானார்கள்.
பயங்கர பூகம்பம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். சிக்கிம், நேபாள எல்லையில் நேற்று முன்தினம் மாலை 6.11 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.8 புள்ளியாக பதிவானது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை 20 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவானது.
வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்படைந்திருக்கும் வீதி |

வீதியை சீர்செய்யும் பேரிடர் முகாமைத்துவப் படையினர் |

மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் விமானப் படையினர் விமானத்திலிருந்து பொருட்களை இறக்கும் காட்சி |
மகாராஷ் டிராவில் நேற்று முன்தினம் காலை இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் லத்தூர், பார்பானி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை 6.20 க்கு இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஏற்கனவே சிக்கிம் பூகம்ப செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.9 புள்ளியாக பதிவாகி இருந்தது. இது உஸ்மானாபாத், சோலாபூர் மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நில அதிர்வால் உயிர் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த 1993 ஆம் ஆண்டு லத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் கில்லாரி நகரமே தரை மட்டமானது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏராளமானவர்கள் பலியானார்கள்.
பயங்கர பூகம்பம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து சிறிய நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். சிக்கிம், நேபாள எல்லையில் நேற்று முன்தினம் மாலை 6.11 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.8 புள்ளியாக பதிவானது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை 20 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவானது.
வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment