9/04/2011

புனர்வாழ்வு பெற்ற 500 முன்னாள் போராளிகள் தென்னிலங்கைக்கு விஜயம்

 புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் தென்னிலங்கைக்கு எதிர்வரும் 8ஆம் திகதி நல்லெண்ண சுற்றுலாவொன்றுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர்கள் எதிர்வரும் 8ஆம் திகதிமுதல் 5 நாட்கள் தென்னிலங்கையில் தங்கியிருந்து மாத்தறை போன்ற பிரதான நகரங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒழுங்கு செய்திருக்கும் இந்த சுற்றுலாவில் கலந்துகொள்ளும் தமிழ் இளைஞர் யுவதிகள் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெறவுள்ள விளையாட்டுநிகழ்ச்சிகளில் சிங்கள இளைஞர் யுவதிகளுடன் பலதரப்பட்ட போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதி இவர்கள் கதிர்காமக் கந்தனைத் தரிசிப்பார்கள். பின்பு மாத்தறையில் நடைபெறும் பல்வேறு களியாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வர். 12ஆம் திகதி இவர்கள் மீண்டும் வவுனியா திரும்பவுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. __

0 commentaires :

Post a Comment