திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்புவெளி அலஸ் தோட்டத்தில் வசிக்கும் சுமார் 45குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிரந்தர காணி இல்லாமல் 15வருடங்களாக வசித்து வருகின்றார்கள். குறித்த 15வருடங்களுக்கும் தங்களுக்கு எந்தவொரு பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை பிரஜை என்கின்ற உரிமை கூட இல்லாமல் தாங்கள் வசித்து வருவதாக இன்று(30.08.2011) அக்கிராம மக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததனை அடுத்து அவர்களுக்கு காணி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான அதிகாரம் இரு வாரங்களுக்குள் வழங்கப்படும் எனவும், இது தொடர்பில் முதற்கட்டமாக அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டதாகவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
குறிப்பு:- மேற்குறித்த கிராம மக்கள் சுமார் 15வருடங்களாக தங்களுக்கான வாக்காளர் உரிமை கூட இல்லாமல் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இதனை இப் பிரதேசத்தின் தமிழ் அரசியல்வாதிகள் கண்டும் காணாது போல் இருந்தமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

0 commentaires :
Post a Comment