இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 இலங்கையரைக் கடற்படையினர் நேற்று மடக்கிப்பிடித்திருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.கிழக்கு கடற்பரப்பில் கல்முனைக்கு அண்மித்ததாக குறித்த படகு பயணம் செய்கையிலேயே இலங்கை கடற்படையினர் நேற்று காலையளவில் படகை முற்றுகையிட்டுள்ளனர். இதில் பயணம் செய்த 44 பேரும் இலங்கையர்களெனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த இப்படகில் ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் உட்பட 44 பேர் இருந்துள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்காக குறித்த தலைமையின் கீழ் பெருந்தொகை பணத்தை வழங்கிய பின்னரே தமது சட்டவிரோத பயணத்தை ஆரம்பித்துள்ளனரெனவும் கொமாண்டர் குறிப்பிட்டார்.
கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டிரு க்கும் 44 பேருடனான படகு நீர்கொழும்பிலிருந்தே தமது பய ணத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு கடற்பரப்பில் பெரும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் பயணம் செய்துக்கொண்டிருந்த மேற்படி படகு நீரில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கையிலேயே கடற்படையினர் கண்டு சரியான வேளையில் உரிய இடத்திற்கு விரைந்து படகை 44 பேருடன் மீட்டிருப்பதாகவும் இல்லையேல் படகு மூழ்கியிருக்க கூடுமெனவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் கடற்படையினரால் இனங் காணப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப் பான முறையில் கடற்படையினரால் திருகோணமலை கரைக்கு அழைத்துவரப் பட்டு பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாக கூறிய கடற்படை பேச்சா ளர், தாங்கள் அவுஸ்திரேலியா நோக்கியே பயணம் செய்ததை ஒப்புக்கொண்டிருப்பதாக வும் குறிப்பிட்டார்.
இவர்கள் பயணம் செய்த படகு பின்னரே கரைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை கடற்பரப்பை கண்காணிக்கும் செய்மதிகள் இயங்கி வருவதனால் இலங்கை கடல் பரப்பிலிருந்து வெளியே செல்லும் மற்றும் ஏனைய கடற்பரப்புகளிலிருந்து இலங்கை கடற்பரப் புக்குள் வரும் அனைத்தும் பதிவாகி வருவதனால் சட்ட விரோதமான முறை யில் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு எவரும் தப்பிச்செல்ல முடியா தெனவும் கடற்படையினர் எப்போதும் விழிப்பு ணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் கொமாண்டர் வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார்.

0 commentaires :
Post a Comment