9/13/2011

முரண்பாட்டு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி: புதிய சமுதாயத்துக்கு புத்துயிர் * ஜனநாயகம், சமாதானம், பொருளாதாரத்துக்கு சிறந்த அடித்தளம் * 2 இலட்சத்து 90 ஆயிரம் பேரை பராமரிக்க 31 மில். டொலர் செலவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் சமரசிங்க உரை

பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டு காலம் உள்ளூரில் இடம் பெயர்ந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்களை பராமரி க்கும் நலன்புரி நிலையங்க ளுக்காக அரசாங்கம் 31 மில்லியன் அமெரிக்க டொலர் களை செலவிட்டுள்ளது.
அதையடுத்து மீள்நிர்மாண நடவடிக்கைகளையும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்வதற்காக அரசாங்கம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருக்கிறது என்று ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக கலந்துகொண்டு உரையாற்றிய பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்தார்.
இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்களின் 7 ஆயிரம் பேர் மட்டுமே இப்போது நலன்புரி நிலையங்களில் வாழ்கிறார்கள். ஏனையோர் அனைவரும் தங்களின் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி சகஜவாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அரசாங்கம் 360 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த 50, 60 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுத்தபோதிலும் அவை அனைத்தும் அதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புக் கிடைக்காத காரணத்தினால் தோல்வியில் முடிவடைந்த என்று தெரிவித்த அமைச்சர், இந்த சந் தர்ப்பத்திலாவது நம் நாட்டவர்கள் புரிந்துணர்வுடன் இணக்கப்பாட்டையும், நல்லுறவையும் ஏற்படுத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்காக சாதி, மத, குல பிரதேச பேதங்களை மறந்து தங்கள் பூரண ஒத் துழைப்பை வழங்குவதற்கு திடசங்கற்பம் பூணவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை வருமாறு,
2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் இலங்கையில் முடிவடைந்ததையடுத்து 2 வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. இந்தக் குறுகிய காலத்தில் இலங்கை மக்களிடையே புது நம்பிக்கைகள் வலுப்பெற்று இருப்ப துடன், நாடு பல்வேறு துறைகளில் முன் னேற்றம் அடைந்துவருவதைப் பார்த்து 30 ஆண்டுகால யுத்தத்தின்போது எதிர் நோக்கிய பல்வேறு சவால்களுக்கு இல ங்கை எவ்விதம் வெற்றிகரமாக முகம் கொடுத்திருக்கிறது என்று பார்த்து உலக நாடுகள் இன்று நம்நாட்டவர்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறது.
இலங்கை அரசாங்கம் தன்னை வழிநடத் தும் உன்னத கொள்கைகளுக்கமைய பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் முறியடித்து இலங்கை போன்ற பல்வேறு நாடுகளுக்கு இன்றைய நவீன உலகில் முன்மாதிரியாக விளங்கி வருகிறது.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் பயங் கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவு பெறுவதற்கு முன்னரே நாம், எமது சர்வதேச நண்பர்களையும் மற்றும் பங்கு தாரர்களையும் இலங்கையில் பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டாலும், எஞ்சியிருக்கும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத வலையமைப்பும், அதனுடன் செயற்படும் ஏனைய அடிவருடி களும் இலங்கைக்கு எதிரான அனாவசி யமான அழுத்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை அறி வித்திருந்தோம்.
இலங்கைக்கு எதிரான அந்நாடுகளிலுள்ள புலம் பெயர்ந்த இலங்கையர் தங்களை சிறந்த முறையில் தயார்நிலைப்படுத்தி தங்களிடமிருக்கும் சகல வளத்தையும் இந்த அழுத்தங்களை மேலும் வலுவடையச் செய்வதற்கு உறுதுணை புரிந்து வருகின்றனர்.
ஆயினும், இலங்கை அரசாங்கம் இறுதியில் யுத்தத்தில் வெற்றி பெற்று சமாதானத்தை ஏற்படுத்தி தன்நாட்டு மக்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 30 ஆண்டு காலம் துன்பத்தில் ஆழ்ந்திருந்த மக்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக அமைந்தி ருந்தது.
இலங்கைக்கு எதிராக பல்வேறு இலக்குகளிலிருந்து பல நோக்கங்களை அடிப்படையாக வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது அரசாங் கம் வெளிநாட்டிலுள்ள எங்கள் நண்பர் களுக்குப் பல தடவைகள் முன்னறிவித்தல் கொடுத்திருக்கின்றோம். இந்த அமைப்புக் களின் உள்நோக்கங்களை உணர்ந்து அவற்றுடன் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கேட்டிருக் கின்றோம்.
நாம் வெளிநாட்டவர்களுக்கு எங்கள் இலட்சியக் கனவை நிறைவேற்றவிருப்பது பற்றி வெளிப்படுத்தவிருக்கின்றோம். இலங்கை மொழி, மத, இன மற்றும் கலாசார வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் அன்போடு அழைத்து அவர்களை இங்கு அரவணைத்துக்கொள்ள விரும்புகின்றோம்.
சமீபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இலங்கை இன்று நல்லிணக் கப்பாடு, புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், நாம் பல்லாண்டுகால வேதனை வடுக்களை மறந்து எங்கள் சக்தியை நாட்டினதும், மக்களினதும் மேம்பாட்டுக்காக புதிய சமுதாயமொன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து எதிர்காலத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைப்போம் என்றும், முழு உலகத்துக்கும் பயங்கரவா தத்தை முறியடிக்கலாம் என்றும் நாம் எடுத்துக்காட்டியும் இருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி தனதுரையில் கூறினார்.
திடசங்கற்பத்துடன், மனிதாபிமான சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நாம் வாழும் பிராந்தியத்தின் கலாசாரத்தையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்கக்கூடிய வகையில் இந்த நற்பணியைச் செய்துமுடித் திருக்கிறோம் என்றும் கூறினார்.
பல இன மக்கள் வாழும் இலங்கையில் சமாதானத்தையும், சமத்துவத்தையும் அனுபவிக்கக் கூடிய ஒரு சமாதானத்தை உருவாக்குவதன் மூலமே எமது அரசாங்கம் மனித உரிமைகளை நிறைவேற்றி வருகிறது என்று உறுதியளித்திருப்பதை நான் இங்கு உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
வடபகுதியில் நாம் மூன்றுதரப்பு திட் டத்தின் மூலம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இலங்கை அரசாங்கம் ஒரு தரப்பாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றொரு தரப்பாகவும், சிவில் சமுதாயம் மூன்றாம் தரப்பாகவும் இதற்கு தங்கள் பூரண பங்களிப்பை வழங்கவுள்ளன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கான வளங்களைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
வடபகுதியில் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் நல்வாழ்வு நிலையங்களை நிர்வகிப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் 31 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் அரசாங்கம் செலவிட்டுள்ளது.
இம்முயற்சிக்கு பல சர்வதேச அமைப்புக் களும் செய்த உதவி பாராட்டுக்குரியது. அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு 2009ல் மாத்திரம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்வரை செலவிடப்பட்டுள்ளது. பாதைகள், பாலங்கள், அரசகட்டடங்கள், பாடசாலைகள், சுகாதார வசதிகள், நீர் விநியோகம் மற்றும் அதுபோன்ற சகல தேவைகளும் இப்போது அங்கு புனர் நிர்மானம் செய்யப்படுகின்றன. இத்தகைய வசதிகளைச் செய்வதுடன் எல்.ரி.ரி.ஈ.யினால் முற்றாக சேதப்படுத்தப்பட்டு வடபகுதி ரயில் பாதைகளும் இப்போது புனர் நிர்மானம் செய்யப்படுகின்றன.
மக்களின் எதிர்கால வசதிக்காகவே இந்தப் புனர்நிர்மானப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. எந்தவொரு நாடும் சாதிக்காத வகையில் 2009 மே மாதம் முடிவில் உள்ளூரில் இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்களை முழுமையாக மீள் குடியேற்றும் பணியிலும் நாம் வெற்றி கண்டுள்ளோம். தற்போது 7 ஆயிரம் மக்கள் மாத்திரமே முகாம்களில் இருந்து வரு கிறார்கள். இலங்கையின் இந்த சாதனை உள்ளூர் யுத்தங்களை எதிர்நோக்கியிருக்கும் மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரண மாக விளங்குகிறது.
அரசாங்கம் மீள்குடியேற்றத் திட்டத்திற்காக 360 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் 11 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கம் புனர் வாழ்வளித்து வருவதுடன், அவர்களில் பலர் நீதிமன்றங்களின் ஊடாக இப்போது விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
சுமார் 9 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் சமூக நீரோட்டத்தில் சங்கமித்துள்ளார்கள். தற்போது 2700 பேர் மட்டுமே புனர்வாழ்வைப் பெற்று வருகிறார்கள்.
இந்த இலக்கையும் கூடிய விரைவில் குறைப்பதற்கு சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகரீதியிலான தேர்தல்களை நடத்தும் பணியை ஆரம்பித்து, இலங்கை மக்கள் அனைவருக்கும் சமாதானத்துக்கும், வளமான வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய வகையில் ஜனாதிபதி இன்று ஒரு புதிய அரசியல் கலாசாரத்தைக் கடைப்பிடித்து வருகிறார். அடிமட்டத்திலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இது பேர் உதவியாக அமையும். எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் தலையீடுகள் இன்றி கிழக்கிலும், வடக்கிலும் தேர்தல்கள் முடிவு பெற்றன.
தேசிய மட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு தீர்வுகாணும் எண்ணத்துடன் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் நியமிக்கப்படவிருக்கிறது.
இலங்கை மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது தற்போதைய சூழ்நிலையில் ஒரு அடிப் படை முக்கிய தேவையாக அமைந்துள்ளது.
கடந்த 50 முதல் 60 ஆண்டு காலத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்து வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் தோல்வியில் முடிவடைந்தது. அதனால்தான் தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் நிலையான தீர்வொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் விரும்பு கிறது.
ஒரு சில அரசியல் குழுக்களின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்படும் தீர்வுகள் இறுதியில் வெற்றியடையப்போவ தில்லை. கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம் இந்தக் கூற்றுக்கு சான்று பகர்கின்றன. 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரும் இலங்கையில் ஜனநாயக அமைப்புக்கள் சிறிதேனும் பாதிக்காமல் தலை நிமிர்ந்திருப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எனவே அனைவரும் சிறு பேதங்களை பொருட்படுத்தாமல் தேசிய ஒருமைப்பாட் டுக்கு உண்மையிலேயே கடப்பாட்டுடன் செயற்பட்டால் மாத்திரமே நம்நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும். எங்கள் நாட்டில் பல்லாண்டுகாலம் நடைமுறையிலிருந்த பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச்சட்ட விதிகள் இப்போது செயலிழக்கும் கட்டத்தை அடைந்திருக்கிறது.
இது 2005ஆம் ஆண்டு எங்கள் வெளிவிவகார அமைச்சர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அமுலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் படிப்படியாக அவசரகாலச்சட்ட விதிகளை செயலிழக்கச்செய்து வந்து உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் பராமரிப்புக்காக சில சட்டப்பிரமாணங்களை நடைமுறையில் வைத்திருந்தோம்.
இப்போது நாட்டில் அமைதி திரும் பிக்கொண்டிருப்பதனால் அவசரகாலச்சட்டம் முற்றாக நீக்கப்பட் டுள்ளது. இந்தப் பேரவைக்குத் தலைமை தாங்கும் தலைவி அவர்களுக்கு நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக்கூற விரும்புகிறேன். முரண்பாட்டுநிலை மாறிவரும் ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இலங்கை மக்களின் வாழ்க்கை மீள்நிர்மானிக்கப்பட்டு வருகிறது. அதன்கீழ் பொருளாதார ரீதியில் வலுவுடைய சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் மூலம் ஜனநாயக உரிமைகளையும் பேணிப்பாதுகாப்பதே அரசாங்கத்தின் இலட்சியமாகும்.
பயங்கரவாதத்தை படுதோல்வியடையச் செய்த பின்னர் அரசாங்கம் எங்கள் நாட்டில் ஜனநாயகத்துக்கும், சமா தானத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த அடித்தளத்தை அமைத்துள்ளது.

0 commentaires :

Post a Comment