ஒரு நாடாக இருந்தாலும், சரி ஓரு மாகாணமாக இருந்தாலும் சரி, மாவட்டமாக இருந்தாலும் சரி, பிரதேசமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி வர்த்தகத்துறையிலும் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் துறையிலும் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற வர்த்தக கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசுகையில் கிழக்கு மாகாணம் தற்போது உல்லாசம் , விவசாயம், கைத்தொழில் ,வர்த்தகம், சுகாதாரம், வீதி அபிவிருத்தி போக்குவரத்து, என அனைத்து துறைகளிலுமே அபிவிருத்தி கண்டு வருகின்றது. அவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கும் எமது மாகாண மக்கள் தங்களது செயற்திட்டங்களை மேம்படுத்துவதற்கும் இது போன்ற கண்காட்சிகள் துனைபுரியும் எனவே இது போன்ற பயன்படத்தக்க வினைத்திறன் கொண்ட வர்த்தக கண்காட்சிகளுடன் சந்தைப்படுத்தல் என்பவற்றையும் ஏற்படுத்தி எமது மாவட்ட மக்கள் பயன்பெற சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். இந் நிகழ்வில் தேசிய தொழில் அதிகாரசபையின் தலைவர் எம்,எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.சீ.கிருஸ்னாநந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம், கிழக்கு பல்களைக்கழக உபவேந்தர் கே.பிரேம்நாத் மற்றும் யுனிற்டோ நிறுவன திட்டமிடல் பணிப்பாளர் புளோரிடா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment