கிழக்கு மாகாணத்திலே போர், சுனாமி, வறுமை மற்றும் ஏனைய அணர்த்தங்களால் கணவனை இழந்து இருக்கின்ற பெண்களுக்கு அவர்களை வாழ்வாதாரத்தை ஈட்டும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்திய சேவா பெண்கள் அமைப்புடன் கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்திய சேவா பெண்கள் அமைப்பானது கிழக்கு மாகாணசபையுடன் இனைந்து கிழக்கு மாகாணத்திலுள்ள விதவைகளின் வாழ்வாதார மேம்பாட்டினை முன்னெடுப்பதற்கு இவர்கள் முன்வந்துள்ளனர்.
இன்று (05.07.2011) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த இந்திய சேவா பெண்கள் அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர். ஆதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலே உள்ள விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்த்திட்டங்களையும், பயிற்சிகளையும் தாம் வழங்க முன்வந்தமை தொடர்பாக இன்று கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.
முதல் கட்டமாக மட்க்களப்பு மாவட்டத்திலே போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இருந்து 40 பயிற்ச்சி போதனா ஆசிரியர்கள் இந்தியா சென்று பயிற்ச்சி பெறும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு அப்பயிற்சிநெறி முடிவுற்றதும் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 800 விதவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி நெறி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வருட காலங்களை அடிப்படையாக மேற்படி செயற்த்திட்டத்திற்காக கிழக்கு மாகாணத்திலே கணவனை இழந்த விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை வளங்கமுடியமென கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மேற்படி செயற்த்திட்டமானது முற்று முழுதாக இனைந்ததாகவே அமைந்திருக்கும் எனவும் இந்திய சேவா பென்கள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட திருமதி.உமாதேவி சுவாமிநாதன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைக்கும் இந்திய சேவா பென்கள் அமைப்பிற்குமான ஒப்பந்தம் எதிர்வரும் 2 வாரகாலங்களுக்கு மேற்கொள்ளப்படும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சமுகசேவை திணைக்கள பணிப்பாளர் மணிவன்னன், இந்திய சேவா பெண்கள் அமைப்பு உமாதேவி சுவாமிநாதன், வயகல் சோடாலியா, வீனா சர்மா மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :
Post a Comment