மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட சகல விடுதி உரிமையாளர்களுடனும் இன்று (09.07.2011) கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை ஏற்படுத்தி இருந்தார். இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களுக்கான வசதிகளுடன் கூடிய வகையில் சேவைகளை வழங்கி எமது மாவட்டம் உல்லாசத்தறையில் அதிக வருமானம் ஈட்டுவதோடு ஒரு சில தேவையற்ற விடையங்களை மேற்கொள்வதற்கு சிலர் விடுதிகளை பயன்படுத்துவதற்காக இடமளிக்கக்கூடாது, எனவும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டார். அத்தோடு இன்றிலிருந்து அனைத்து விடுதி உரிமையாளர்களும் இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் விடுதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றாக இனைந்து செயற்படுவதற்கான ஓர் சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் விடுதிகளில் வந்து தங்குபவர்கள் அனைவரினது விபரங்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும். எனவும் கேட்கப்பட்டது.
இக்கலந்துரையாலில்; மட்டக்களப்பு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன், பிரதி ஜோர்ச் பிள்ளை, ஆணையாளர் சிவநாதன், விடுதி உரிமையாளர்கள். ஆகியோர்கள் கலந்;;து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment