காத்தான்குடியில் பல் சமய சமாதானப் பெருவிழா வொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்திற் கான இலங்கை மதங்களின் பேரவை யினால் இச்சமாதான பெருவிழா நடாத்தப்பட்டது.
அனைத்து மதங்களையும் பிரதிபலிக் கும் வகையில் மிக சிறப்பாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2000ம் ஆண்டு யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த இன முரண்பாடு உக்கிர மாக இருந்த காலகட்டத்தில் மட்டக் களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டு திருமலை மறை மாவட்ட ஆயரின் அனுசரணையுடன் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பெளத்த மதத் தலைவர்கள் நால்வரும் ஒன்றுபட்டு பல் சமய ஒன்றியம் எனும் பெயரில் இழை ஆரம்பித்தனர்.
இந்த பல் சமய ஒன்றியத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமாதான சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முரண்பாடுகளின்றி மனித நேயம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ இவ் ஒன்றியம் வழி ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங் களிடையேயும், மதங்களிடையேயும் ஏற்படும் சிறிய முரண்பாடுகள் வளர்ந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தாது உடனுக்குடன் ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து மேலும் வளராமல் அமைதியைப் பேண இவ் ஒன்றியம் பிரதானமாக செயற்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இயங்கி வந்த பல்சமய சமாதான ஒன்றியம் கடந்த 15-02-2010 இல் அகில இலங்கை பல் சமய சமாதான ஒன்றியத்துடன் இணைந்து தேசிய மன்றமாக செயற்படுகின்றது.
இந்த வகையில்தான் சமாதானத்திற் கான இலங்கை மதங்களின் பேரவை யுடன் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியம் இணைக்கப்பட்டு தற்போது இப்பெயரில் இவ் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது.
இந்த பேரவையினால் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய வகையில் இந்த பல் சமய சமாதான பெருவிழா நடாத் தப்பட்டது.
காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத் தில் இப்பேரவையின் தலைவரும், மட்டு திருமலை மறை மாவட்ட ஆய ருமான கிங்ஸ்லி சுவாம்பிள்ளையின் தலைமையில் வெகு சிறப்பாக இவ் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சமாதானத்திற்கான இலங்கை மதங்களின் பேரவை பொதுச் செயலாளரும், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி மெதனார்சிவே தம்மஜோதி தேரர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த பேரவையின் உப தலைவரும், இந்து சமய ஒன்றிய செயலாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத், மட்டு, திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பொன் னையா ஜோசப், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் உட்பட சமய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கத்தான்குடி பள்ளிவாயில்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள் பாடசாலை மாணவர்கள் சிவில் சமூக பிரதி நிதிகள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் ஆரம்பத்தில் மண்டப நுழைவாயிலில் இருந்து மத கலாசார மதத்தலைவர்கள் வரவேற்கப் பட்டனர்.
நான்கு மத அனுஷ்டானங்களுடன் விழா ஆரம்பமானது. விழாவின் தலைமையுரையினை விழாவின் தலை வர் மட்டு, திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை நிகழ்த்தினார். இதையடுத்து மதத்தலை வர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
ஆசியுரைகளை மட்டு. அம்பாறை மறைமாவட்ட துணை ஆயர் பொன் னையா ஜோசப் மற்றும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஸன் தலைவர் சிறிமத் சுவாமி ஞானமயானந்த ஜீ மற்றும் பேரவையின் உப தலைவரும், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவருமான மெளலவி ஏ. எம். அப்துல் காதர் (பலாஹி) மட்டக்களப்பு மங்களராமய விகாராதி பதி அம்பிட்டிய சுமணரத்தினதேரர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக சமாதான நடவடிக்கையில் தம்மை அர்ப்பணித்து சமாதானத்துக்காக பாடுபட்டு வரும் மாவட்ட சர்வமத தலைவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களைப் பற்றிய கெளரவ உரைகள் இடம்பெற்றன.
ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளைபற்றி அருட்தந்தை ஏ. ஏ. நவரட்ணமும், அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தைப் பற்றி கலாபூஷணம் மெளலவி எம். எச். எம். புஹாரி (பலாஹி) அமரர் சுவாமி அஜராத் மஹானந்த ஜீயைப் பற்றி பேராசிரியர் கே. தட்சரை மூர்த்தி யும் கெளரவ உரைகளை ஆற்றினர்.
இதையடுத்து இவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்தினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கலில் ஹாஜியாரினால் மாலை அணிவிக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
அமரர் சுவாமி அஜராத் மஹானந்த ஜீக்கான கெளரவத்தை சுவாமி ஞான மயானந்த ஜீயிடம் வழங்கப்பட்டது.
இதில் மதங்களை பிரதி பலிக்கும் சிறப்பு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment