7/06/2011

மருத்துவ சிகிச்சைக்கு பின் கியூபாவிலிருந்து நாடு திரும்பிய வெனிசுவெலா ஜனாதிபதி

மருத்துவ சிகிச்சைக்கு பின் கியூபாவிலிருந்து நாடு திரும்பிய வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
நேற்று முன்தினம் நாடு திரும்பிய சாவேஸ் ஜனாதிபதி மாளிகையின் மேல்தளத்தில் இருந்து அங்கு கூடிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
இதில் அவர் இராணுவ உடையுடன் சிவப்பு நிற தொப்பி அணிந்து வெனிசுவெலா தேசிய கொடியை அசைத்தவாறு மக்கள் மத்தியில் தோன்றினார்.
இந்த உரை 30 நிமிடங்கள் அளவு நீடித்ததாகவும், அவர் வழமையை விட உட்சாகமாக காணப்பட்ட தாகவும் அங்கிருந்த செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
இதில் "நான் மீண்டும் வந்துவிட்டேன் மக்கள் எனக்கு அளித்த ஆதரவுதான் எல்லாவற்றையும் விடவும் சிறந்த மருந்து. கடவுள் எம்முடன் இருக்கறார்" என்று சாவெஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெனிசுலா, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற 200 ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சாவெஸ் முழுமையாக பங்கேற்கவில்லை.
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 56 வயதான ஹுகோ சாவெஸ் மருத்துவ, சிகிச்சைக்காக கடந்த ஜுன் 8ம் திகதி கியூபா பயணமானார். அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment