7/05/2011

மட்டக்களப்பு வாவிக்கரையை அழகுபடுத்தும் வேலை ஆரம்பம்

இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் வாவிக்கரையினை ஒட்டியதான 800 மீற்றர் வீதியினை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நடப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் சிவநாதன், மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

0 commentaires :

Post a Comment