விடுதலைப்புலிகளினால் சுட்டுக் கொல்லபட்ட முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 22வது நினைவு தினம் இன்று புதன்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
1989ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி இரவு கொழும்பில் வைத்து அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ். எம்.பி. வீ. யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் இந்த சம்பவத்தில் கூட்டணியின் தலைவர் எம். சிவசிதம்பரம் காய மடைந்திருந்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா கிளை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வவுனியா நகர சகல ஆலயங்களிலும் விசேட பிரார்த்தனைகள் நடைபெறும். நினைவு தின கூட்டத்தை அமைதியான முறையில் நடத்த தீர்மானித்துள்ளோமென கிளை தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார்.
அதேவேளை, புளொட் அமைப்பு அனுஷ்டிக்கும் வீரமக்கள் தின நிகழ்வு இன்று ஆரம்பித்து 16ம் திகதி நிறைவு பெறும். 1989ம் ஆண்டு ஜூலை இத்தினத்தில் தான் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
0 commentaires :
Post a Comment