7/15/2011

கிழக்கு மாகாணசபைக்கும் தென்மாகாணசபைக்கும் இடையிலான அனுபவ பகிர்வு.

கிழக்கு மாகாணசபைக்கும் தென் மாகாணசபைக்குமிடையிலான அனுபவ பகிர்வு செயலமர்வு 11,12 ஆகிய திகதிகளில் காலி கொக்கல பீச் கோட்டலில் இடம் பெற்றது. 23வருடகாலம் இயங்கிக்கொண்டிருக்கின்ற தென் மாகாணசபையும் 3வருடமாக இயங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணசபையும் தங்களது அனுபவ பகிர்வை செயலமர்வு மூலம் பகிர்ந்து கொண்டார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலமையிலான  குழுவினரும் தென் மாகாணசபை முதலமைச்சர் விஐயலால் டீ சில்வா தலமையிலான குழுவினரும் தங்களுக்கான அனுபவ பகிர்வினை மேற்கொண்டிருந்தார்கள்.
மேலும் இந்த கலந்துரையாடலின் போது 2மாகாணசபைக்குமிடையிலான வேறுபாடுகள், நிருவாக அமைப்பு முறைமை, சபை அமர்வு முறைமை மற்றும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான சலுகைகள், உரிமைகள் என்பன தொடர்பாகவும் முதல் நாள் நிகழ்வின் போது விவாதிக்கப்பட்டது. 2ம் நாளான 12.07.2011ம் திகதி அன்று தென் மாகாணசபை அமர்வினை கிழக்கு மாகாண முதலமைச்சர் தலமையிலான குழு நேரில் பார்வையிட்டதுடன் அவ் மாகாணசபை அமர்வு குறித்தும் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களே கலந்துரையாடினர். இதன் போது கிழக்கு மாகாணசபை சார்ந்தோருக்கும் தென் மாகாணசபை சார்ந்தோருக்கும் நினைவுப் பரிசில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணசபையானது எதிர்வரும் காலங்களில் தென்மாகாணத்திற்கு வருகைதந்து இவ்வாறான புரிந்துணர்வான கலந்துரையாடலுக்கான அழைப்பையும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment