20.07.2011 இணைய பதிப்பிலும் 21.07.2011 நகரப் பதிப்பிலும் வெளியான த ஐலண்ட் பத்திரிகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட முன்பக்க செய்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாக கட்சித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு சிவநேசதுரை சந்திரகாந்தனின் பெயரையும் தொடர்பு படுத்தியும் பிரசுரிக்கப்பட்ட செய்தியானது முற்றிலும் உண்;மைக்கு புறம்பான செய்தி என்பதுடன் கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் அவகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை எழுத்தாளர் திரு, லால் குணசேகரவினால் வரையப்பட்ட செய்தியானது அடிப்படை பத்திரிகை தர்மத்தை மீறுவதும் கட்சியையும் கட்சிக்கு வாக்களித்த மக்களையும் அவமரியாதைக்கு உட்படுத்துவதுடன் கட்சி தொடர்பான தவறான அபிப்பிராயங்களை தோற்றுவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட வகையில் புனையப்பட்தாக கட்சி கருதுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்; இடம் பெற்ற வங்கிக் கொள்ளையில் சட்டவிரோதமான நடவடிக்கையில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சியையும் அதன் தலைமையையும் தொடர்பு படுத்தும் பொழுது அவை தொடர்பான அக்கட்சியின் சார்பான கருத்துக்களும் இடமளிக்கப்பட்டிருக்க வேன்டும். இது தொடர்பில் கட்சி தலைவரையோ, செயலாளரையோ, ஊடகச் செயலாளரையோஅல்லது கட்சியின் ஊhடகப் பேச்சாளரையோ அணுகி எமது கட்சி தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவ் அடிப்படைநெறி கூட பின்பற்றாமையால் குறிப்பிட்ட செய்தி முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டமையானது, மிக பாரிய தவறும் ஊடகத்துக்கு எதிரான செயலுமாகும்.
2008.01.23ம் திகதி எமது கட்சியானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் இலங்கை அரசினால் அமைப்புக்கு உட்பட்டு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்று கொள்ளப்பட்ட பின்பு 09உள்ளுராட்சி சபைகளையும் , கிழக்கு மாகாணசபையையும் ஆட்சி செய்கின்ற கிழக்கு மாகாணத்திலுள்ள பொறுப்பு மிக்க அரசியல் கட்சியாகும். எமது கட்சி ஆயுத கலாச்சாரத்தில் தோற்றம் பெற்றதாயினும் சனநாயக அரசியல் நீரோட்டத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டு சனநாயக அரசியலில் இனைந்த பின்பு எமது ஆயுதங்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு வன்முறையற்ற அரசியல்கட்சியாக மக்கள் பணியாற்றுகின்றோம்.
இவ்வாறு சனநாயக அரசியில் நம்பிக்கை கொண்ட பொறுப்பு மிக்க அரசியல் கட்சி மீது ஆயதகலாச்சார,; சட்டவிரோத செயலில் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவதானது கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கழங்கம் ஏற்படுத்தும் செயலே அன்றி வேறொன்றும் இல்லை. எனவே ஆதாரமற்ற வகையில் உண்மைக்கு புறம்பான முறையில் கட்சியினதும் கட்சி தலைவரினது பெயரை தொடர்பு படுத்தி வெளியிடப்பட்ட தவறான செய்திக்கு தங்கள் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்பதுடன், தங்களது மன்னிப்பும் எமது மறுப்பும் முன்பக்கத்தில் அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட வேண்டும். இல்லாத விடத்து கட்சிக்கும் கட்சி தலமைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமைக்காக தங்கள் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.

எ.சி.கைலேஸ்வரராஜா,
செயலாளர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
செயலாளர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
0 commentaires :
Post a Comment