7/17/2011

ஆலய உற்சவங்களில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பங்கேற்பு.

இந்துக்களின் தெய்வ வழிபாட்டு முறைகளில் ஆகம முறைகளிலும்இ பக்தரி
முறைகளிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுதெய்வ பக்தரி
வழிபாட்டில் இருந்து ஆகம முறைகளுக்கு ஆலயங்கள் மாற்றப்பட்டு வருகின்றது.
ஆனால் இந்துக்களின் பாரம்பரிய பக்தரி முறைகளில் மாற்றங்கள் செய்வது
இந்துக்களின் பாரம்பரிய கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பல
வழிகளில் கிராமிய தெய்வ வழிபாட்டை ஊக்குவித்துவரும் கிழக்கு மாகாண
முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையின் கீழ் கலாசார
பிரிவினூடாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந் நிலையில்
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்இ கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயம்இ ஆரையம்பதி செங்குந்தர் வீதி மாரியம்மன் ஆலயம்இ ஆரையம்பதி வம்மிக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கும் வழிபாட்டிற்காக விஜயம் செய்ததுடன் அங்கு நிருவாக சபையுடனும் கலந்துரையாடியதுடன் அங்கு மக்களுடன்   அன்னதான   நிழ்விலும்    கலந்து   கொண்டார்.

0 commentaires :

Post a Comment