7/25/2011

திருக்கோவில் பிரதேச சபை : தமிழரசுக் கட்சி இரு பிரதிநிதிகளை இழந்தது

திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி இரு ஆசனங்களை இழந்தது. கடந்த தேர்தலில் 8318 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றிருந்தது.
ஆனால், இம்முறை அக் கட்சி 6865 வாக்குகளை மாத்திரம் பெற்று 07 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத் தையும், ஐ. தே. கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது. அதன்படி வரலாற்றில் முதன் முறையாக திருக்கோவில் பிரதேச சபையில் 2 ஆசனங்களை தமிழரசுக் கட்சி பறிகொடுத்துள்ளது.
கடந்த 03 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 04 ஆசனங்களையும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 02 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி இழந்திருந்தமை தெரிந்ததே. ஆனால், காரைதீவு பிரதேச சபை மாத்திரம் அதே வலு வான நிலையில் உள்ளமை குறிப் பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment