தெகியத்தகண்டிய பிரதேசத்தில் வாழ்கின்ற ஆதிவாசி சமூகத்தினர் கல்வி கற்கின்ற நாமெத கமவில் அமைந்துள்ள கேனானிகல வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார். ஆதிவாசிகளின் தலைவர் கேடடுக்கொண்டதற்கினங்க அப்பாடசாலைக்கு விஜயம் செய்த கிழக்கு முதல்வர் அப்பாடசாலையின் குறைகளை கேட்டறிந்ததோடு ஒரு தொகை கணனிகளை அப்பாடசாலைக்கு வழங்குவதாகவும் எதிர்வரும் ஆண்டில் குறித்த பாடசாலையின் பௌதீக வளத்தை அபிவிருத்தி செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
0 commentaires :
Post a Comment