7/23/2011

அங்கவீனர்களுக்கு மாதாந்த கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு

   மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தினாலும், இயற்கை அணர்த்தங்களினாலும் அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பணவு முதன்முறையாக இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் வலுவிழந்தோருக்கு வழங்கப்படும் இக் கொடுப்பனவானது மண்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 34பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன. இவர்களின் கொடுப்பனவுக்கான காசோலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். இதன் போது வலது குறைந்தவர்களுக்கான முற்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கலாமதி பத்மராஜா தலமையில் மட்டக்களப்பு சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அதிகாரிகள்; உட்பட பலர் கலந்து கொண்டனர். இக் கொடுப்பணவு இவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படவுள்ளன.

0 commentaires :

Post a Comment