கந்தப்பன் சூரியகுமார்
கிழக்கு பல்கலைக்கழகம்
தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வசந்தன் கூத்து இன்று அருகிக்கொண்டு வருகின்ற நிலை யிலே அதனைப் பற்றிய ஆய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படு கின்றது. இந்த வசந்தன் கூத்தானது. அழகியல் உணர்வினைக் கொண்டமைவ தோடு சிறுவர்களுடைய அரங்கச் செயற் பாடாகவும் பாமர மக்களிடையே பயிலப் பட்டு வருகின்ற ஒன்றாக இருக் கின்ற வேளையிலும் அவை ஓர் அழகு சார் கிராமிய கலை என்பதில் வியப்பில்லை.
ஈழத்து தமிழ் பாரம்பரியத்திலே தமிழருக்கு என தனியான கலைகளை வைத்திருக்கின்ற கலைகளில் இதுவும் பிரச்சித்தமானதாக பல்வேறு பிரதேசங் களிலும் ஆடப்பட்டு வந்தாலும் இவற் றின் சிறப்பான தன்மையை மட்டக் களப்பு பிரதேசத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவற்றிலே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேத்தாத்தீவு என் னும் கிராமத்தில் ஆடப்பட்டு வரும் வசந்தன் கூத்தின் ஆற்றுகையினை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரையினை எழுதுகிறேன்.
இங்கு வசந்தன் ஆடப்பட்டு வருவ தோடு இதற்கென ஓர் பரம்பரையே இருந்து செயற்பட்டு வருகின்றமையி னைக் காணலாம். இவர்கள் வசந்தன் என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங் களை கொடுத்திருப்பதனைக் காணலாம்.
வசந்த காலத்தில் ஆடியதால் வசந்தன் கூத்து எனவும் சிறுபிள்ளைகளை வசந்தன் பிள்ளைகள் எனவும் இவ்வா றான பிள்ளைகளால் ஆடப்படுவதால் வசந்தன் கூத்து வசந்த மகாராசனின் மனைவியை மகிழ்விப்பதற்காக ஆடிய தால், கூறுவதோடு இவ் ஆற்றுகை கண்ணகியின் கோபம் தணிக்க வசந்தன் பிள்ளைகள் கோல்கொண்டு ஆடியதால் வசந்தன் எனவும் பெயர் வந்ததென ஓர் விமய சார்பான கதை யும் இருப்பதாகவும் வசந்தனை விளக் கும் இவர்களின் இக் கலைவடிவ மானது முழுக்க முழுக்க சிறுவர்களின் ஆற்றுகையாகவே இடம்பெறுவதனை இதன் அறிக்கையில் இருந்து காணலாம்.
இவ் வசந்தன் ஓர் பருவகால செயற்பாடாகவே மேற்கொள்ளப்படு கின்றது. இந்த வசந்தன் ஆற்றுகை வைகாசி மாதம் இடம்பெறுகின்ற கண்ணகை அம்மன் ஆலய நேர்த்திக் கடனுக்காக ஆடப்படுவதனால் தை, மாசி, பங்குனி காலப்பகுதியில் சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு வசந்தன் பழக்கப்பட்ட ஆயத்தமாகும்.
இந்த வேளையில் சிறுவர் மாத்திர மின்றி ஊரிலுள்ள பெரியவர்களும் அழைக்கப்பட்டு அண்ணாவியாரால் வசந்தன் ஆடப்படப் போகிறது என அனைவரினதும் முன்னிலையில் கூறப்படுகின்ற வேளை அனைவராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு, எத்தனை சிறார்களைக் கொண்டு ஆடுவது யார் யாரைத் தெரிவு செய்வது என்பது சிறார்களின் எண்ணிக்கையிலிருந்து தேர்வு இடம்பெறும்.
அன்று சிறுவர் களும் பெரியவர்களுடன் அமைதியாக மர நிழலில் அமர்ந்திருந்து அண்ணா வியார் குழாமும் தேர்வில் ஈடுபட்டு சிறார்களை அளவு பிரமாணங்களுக் கேற்ப தெரிவு செய்து விடுவார்கள். அன்றைய தினம் சிறார்களின் மனதில் ஓர் சந்தோசமான நாளாக ஆரம்பிக்கத் தொடங்குகிறது என்றார்.
இவ்வாறு இடம்பெறத் தொடங்கினா லும் சிறார்கள் கல்வி பயிலுகின்றவர் கள் ஆதலால் கூத்து பயிலுகின்ற நேரமும் மாலை நேரமும் ஆதலால் அவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு, கூத்து என பல பிரச்சினைகள் ஏற்படும். பின்னர் அதற்கேற்க நேரமாற்றங்களைச் செய்து முன் வந்து கூத்து செயற்பாட்டில் ஈடுபடுவது அவர்களுக்கு சந்தோசமாக அமையும்.
அது மாத்திரமின்றி அவர்கள் பெரியோர் சொற் கேட்டு அந்த அண்ணாவியார் குழாமுடன் அன்னியோன்னியமாகி எங்கிருந்து தூரச் சொந்தமாக இருக்கும். சிறார்களும் ஓர் குடும்பம் மாதிரி இணைந்து மகிழ்வாக வாழுகின்ற ஓர் நிலை ஏற்படுத்தி சிறுவர்களின் எழுர்ச்சியையும் ஆளுமையையும் வளர்க்கின்ற சூழலை இந்தக் கூத்து ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
சிறுவர்கள் ஆடலைப் பழகுகின்ற வேளையில் அண்ணாவியார் பாடல் களை பாடுவார். அதாவது தரு, விருத்தம் போன்றவற்றினால் கவரப் படுகின்றார்கள். அதனால் ஆடல், கோலங்களை பயில்கின்றார்கள். இதனால் பெரியவர்களால் செய்ய முடியாத துள்ளல், பாய்தல், குந்துமிதி, பொடியடி, வீசரணம், சிறுவட்ப எனப்பல ஆடல் அசைவுகளை பயில்வது அவர்களின் பரண ஆளுமையின் விருத்தியையும் உடல் விருத்தியையும் விருத்தி செய்கின்ற வகையில் அமைவதோடு அவர்களின் சிந்தனைகளின் எழுர்ச்சிகளும் மேலோங்கி உதவி செய்வதாக இந்த வசந்தன் அமைவது மிகவும் முக்கியமானதாக காணலாம்.
அவர்கள் மாத்திரமின்றி ஏனைய பார்வையாளர்களாக இருக்கின்ற சிறுவர்களும் இதனை இரசனை உணர்வோடு கூத்துப் பார்ப்பதற்காக அந்த ஆடல் தொடங்கிய பொழுதே வந்து சேர்கிறார்கள்.
கணினி தொலைக்காட்சி என சிறுவர்களை தன்வசமாக உள்வாங்கி வைத்திருக்கும் இந்தக் காலச் சூழலில் இவ்வாறான சிறுவர் சமூகங்களை இணைத்துக் கொள்வதாக இந்த கூத்து அமைகின் றது. அதில் ஆடப்படும் சிறார்களை யும், பார்வையாளர்களாக இருக்கின்ற சிறுவர்களும் ஓர் இடைவேளை நேரங்களில் இந்த ஊடக வலையில் இருந்து விடுபட்டு ஒன்றாக தாகசாந்தி களில் கலந்து மகிழ்வாக வாழுவது என்பது எல்லாச் சூழலிலும் கிடைக்காதது.
மேலும் இவ்வாறாக செல்கின்ற வேளையிலே சிறுவர்களின் ஒழுக்க விழுமியங்களும், கடமை உணர்வுகளும், பொறுமை என பல்வேறு நலன்களுக்கு இவர்களை விருத்தி செய்யும் களமாகவும் இக் களறியினை முன்னெடுக்கப்படுகின்றது.
அவர்களைக் குறிப்பிட்ட நேரத்திற்கு அழைத்தவுடன் அவர்கள் சேருதல், அண்ணாவியாரின் சொற் கேட்டு நடத்தல் என்பன சிறுவனின் துள்ளல் பருவத்திலும் அவனை அவனே கட்டுப்படுத்தி வாழும் அதிகாரத்தன மற்ற அன்புக்குள் கட்டுப்பட்டு வாழுதல் என்பன சிறுவர்களின் குறு நாள் கலைக்கூட்டமாக களரி விளங்குகின்றது என்பது வசந்தனின் சிறப்பாகவே நாம் பார்க்கலாம்.
அத்தோடு இவ்வாறாகப் பயிலப்பட்டு வரும்போது அவர்களை அரங்கேற்றம் செய்து அதனை ஊருக்குக் காட்ட வேண்டிய நிலை ஏற்படும்போது அதற்கான பூர்வங்க வேளைகளில் அனைவரும் ஈடுபடுவார்கள்.
சிறார்க ளின் பெற்றோர்கள், பொது அமைப்பு க்கள் என இவ் வேலைகளில் கூந்தர் குழாமுடன் இணைந்து செயற்படுபவர். இதில் சிறார்கள் மகிழ்வு உணர்வுடன் இவர்களே இதில் முழு முனைப்புடன் அதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபடுவார்கள்.
கூத்துக்கான ஆடைக ளைத் தெரிவு செய்தல் மாலைகள். தலைப்பாகைகள், சதங்கை கூத்துக்கான கம்பினை (கோல்) அலங் கரித்தல் என ஆர்வமாக செயற்படு வார்கள். எப்போது அரங்கேற்றம் என இமை மூடாது செற்படுபவர்களாக இருப்பது அவர்களில் ஊக்கத்தினைக் காட்டுகின்றது.
அரங்கேற்றத்தில் அழைப்பிதழ் கொடுக்கின்ற வேலைகளில் சிறார்களே முன் நின்று செயற்படுவர். அரங்கேற் றத்தில் ஓர் வருடமாக நினைத்து தம் உறவினரின் வருகையை எதிர்பார்க்கும் இந்த சிறார்களுக்குரிய வருடம் அன்று தான் எனும் மகிழ்வுடன் வாழும் நாள் அன்றாகும். ஏனைய கிராமத்தில் இருக்கும் அவர்களது உறவுகளும் இதில் கலந்து மகிழும் நாளாக அன்று இருப்பதோடு அரங்கேற்ற கலரியில் கெளரவிப்புக் கள் எல்லாம் இடம்பெறும்.
இவ்வாறான அரங்கேற்ற நாளில் மக்களின் பலர் கூடுவதால் அந்த இடம் களைகட்டும். அதில் சிறுகடை வியாபாரிகள் தாம் சிறு இலாபமானது பெற வேண்டும்.
எனும் நோக் கோடு சிறுகடைகளைக் கொண்டு வருவதும் அதில் சிறார்களின் உறவினர்கள், ஏனையவர் கள் எனப் பலரும் பொருட்கள் வாங்கி மகிழ்வுடன் இருப்பது ஓர் சந்தோசமாக அமைவதும், அனைவரது மனதினை யும் இன்பத்தில் ஆழ்த்து வதோடு சமூக உறவினை புதுப்பித்தலுடன் ஏனைய கூடத்தாரும் சிறுவர்களின் நண்பர்களும் கண்டுகளி க்க வரும்போது அவர் களுக்கும் தாமும் ஆட வேண்டும் என்ற ஆசை யும் ஊட்டுவதோடு ஏதோ ஒரு வாதத்தில் அவர்களை யும் அந்த உணவர்வுக்குள் கொண்டு சென்றுவிடுகின்றது. இவ்வாறாக அவர்களும் பாடசாலை கள் போன்ற இடங்களில் பயின்று வருவது இந்த கிராமிய கலையினை வளர்க்கின்றதாக அமையும்.
இவ்வாறாக அரங்கேற்றப்பட்டு கோயில்களில் ஆடுவதற்காக செல்லுகின்ற வேளைகளில் சிறுவர்கள் ஏதோடு ஓர் புது இடங்களுக்கு நாம் கூத்தினை ஆட போகின்றோமே என்கின்ற எண்ணத்தினால் மேலும் கூத்தில் ஈடுபடல் நேரத்திற்கு தயாராதல் என்பன தங்களைத் தாங்கள் அறியாமலே அவர்களுக்குள் சேர்வதும் அவர்களின் பெற்றோருக்கு சிறுவர்களின் நலனுக்காக உதவ வேண்டும் எனும் எண்ணமும் மேலோங்கும் அளவிற்கு சிறுவர்கள் இவற்றில் முனைப்புடன் செயல்பட அவர்களின் வயது, மனநிலை போன்றன உறுதுணை செய்கின்றது.
மேலும் இவ்வாறான இடங்களில் கூத்து ஆடச் செல்லும் வேளையில் விருத்தங்கள், தாளிசைகள் பாடுவதற்காக சிறார்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படும்போது அவர்கள் முனைவது என்பது அவர்களை கல்வித் துறையில் முன்நோக்கி செல்கின்ற நிலைகளுக்கும் வழியமைக்கின்ற வகையிலும் கூத்து விளங்குகின்றது எனலாம்.
இவர்கள் வயதுடையவர்களுடன் கோயில் போன்ற இடங்களுக்கு அவர்களின் கட்டுப்பாட்டுடன் செல்வது போன்றனவும் பணிவு போன்றவற்றினையும் வளர்ப்பதுடன் கலைஞர்களின் பணிவுகள் போன்றனவும் சிறார்களைச் சார்கின்றது. அத்தோடு நேர்த்தி அழகியல் போன்றன சிறார்களை சார்கின்றது என்பதும் கூத்தின் அறிவூட்டல் என்றே கூறலாம்.
இவ்வாறான சின்னஞ் சிறார்களினால் வெளிப்படுத்தப்படும் கோல்கொண்டு ஆடும் வசந்தனூடாக சில சிறார்கள் நற்பழக்கம் மற்றும் பொறுமை, விட்டுக் கொடுப்பு, ஞாபக சக்தி, கற்பனைத் திறன் எனப் பல்வேறு விடயங்களுடன் வசந்தன் பற்றிய அறிவு, வரலாற்றுக் கதைகள், கிராமியக் கதைகள், தொழில்சார் கதைகள் எனப் பல்வேறு அறிவுகளை இவ் அத்தியாயத்திலே பெற்றுக்கொள் கின்றார்கள்.
எனினும் இக் கலையினை சிலர் துஷ்பிரயோகம் செய்து இதன் பழமையினை இல்லாமல் செய்திருப் பதும் வேதனைக்குரிய விடயமாகும். இக் கலையினை சிதைவுறாது பாதுகாத்து வளர்ப்பதோடு இவ்வாறான சிறுவர் அரங்கச் செயற்பாடான இக்கூத்துக் கலையினை இன்றைய சமுதாயத்தில் சிறுவர்களிடையே சிறு வயதிலே தனித்திருந்து போட்டி, குரோதம், ஒருவரை ஒருவர் வீழ்த்துதல், தான் முந்த வேண்டும் என்ற கணினி மயமான இக்கால கட்டத்திலும் இவ்வாறான ஓர் அரங்கச் செயற்பாட்டினூடாக சிறுவர்களைப் பெரியவர்களுடனும் கூடிச் செயற்படுகின்ற தன்மையினைக் இக் கூத்தானது ஏற்படுத்தியிருக்கிற தோடு இதனால் இச்சிறுவர் அரங்கு உளவியல் மற்றும் உடலில் விருத்தி போன்றனவும் உருவாவதற்கு இவ்வர ங்கச் செயற்பாடானது உதவுகின்றது.
வசந்தன் கூத்து சிறுவர்களை ஒன்றிணைத்து சிறுவர்களின் கற்றல் மகிழ்விப்பு சிறுவர் அரங்கப் பண்புகளை முன்னெடுத்து செல்கின்ற ஓர் கல்வி ஊடகமாக இவ் அரங்கச் செயற்பாட்டினைக் காணலாம்.
இதற்கும் மேலாக இவ் ஆட்டத்தினை பார்க்கின்ற சிறுவர்களிடையே தாமும் முன் வந்து இவ்வாறு செயற்படக் கூடிய ஓர் ஆர்வத்தினையும் வளர்த்தெடுப்பதனையும் இதனூடாக கோயிலில் ஓடுதல், கடை பார்த்தல் என்கின்றதற்கும் அப்பால் இவ்வாற்றுகைகள் இடம்பெறுகின்ற வேளைகளில் ஏனைய சிறுவர்களை இவ்வாற்றுகை ஒரு வகையில் கவர்ந்து கொண்டு அவர்களையும் ஒரு வகையில் முனைப்புடையதாக, வளமானவர்களாக ஓர் கவர்ச்சியினைக் கொடுத்து ஒருவகையில் அவர்களையும் ஆடுதல்,பாடுதல் என்கின்ற ஓர் செயற்பாட்டுக்குள் கொண்டு செல்வதனை எமது சிறார்களின் ஊடாக அவதானிக்கக் கூடியதாய் இருக்கின்றது.
எனவே இவ் ஆற்றுகையானது ஓர் சிறுவர் அரங்கச் செயற்பாடே என்பதற்கு எந்தவித ஐயமும் இல்லை. இதில் இடம்பெறுகின்ற தெரிவு, பயிற்சியளித்தல், தாமாக ஒன்றை மனனம் செய்துகொள்ளல், தெரிவுகளின்படி ஒத்திகைகள், அரங்கேற்றம் எனப் பல்வேறு அரங்கிற்குரிய செயற்பாடுகளை சிறுவர்களின் தன்மையில் பார்க்கக்கூடியதாய் இருக்கின்றது.
இந்த நிலையில் தாமாகவே தாம் சிறுவர்கள் என நினையாது தாம் ஓர் ஆற்றுகையைச் செய்கின்றோம் என முனைப்புடன் செயற்படும் இச்சிறார்களின் பிஞ்சி உள்ளங்களில் இக்கூத்து முயற்சியினை ஓர் சிறுவர் அரங்காக காணுகின்றோம். இது ஓர் சிறுவர் அரங்கச் செயற்பாடே எனலாம்.
எனவே இக்கலையினை ஏனைய சிறார்களுக்கும் தலைமுறை தலைமுறையாக கையளித்து அவர்களில் ஆடல், பாடல், மகிழ்விப்பு, ஒப்பனை, வினோதம் பயிற்சி என உளவியல் செயற்பாடுகளோடு உடலியல் விருத்திக்கும் ஒத்தாசை வழங்குகின்றது. எனவே இதனை வளர்த்து கிராமிய மண் வாசனையுடன் செழுமை பெறச் செய்து என்றும் வாழும் கலையாக மாற்றி சிறுவர் அரங்கினை வளம் பெறச் செய்வது எமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.
0 commentaires :
Post a Comment