கதிர்காமத்திற்கு யால காட்டினூடாக பாத யாத்திரை சென்ற வேளையில் சிறுத்தைப் புலி கடித்து மரணமான தம்பிலுவில் 01ஐச் சேர்ந்த பட்டதாரி இளம் குடும்பஸ்தர் திருமதி கிருஷ்ணபிள்ளை சந்திரகுமாரி (வயது 31) யின் சடலம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கதிர்காம ஆஸ்பத்திரியில் சடலம் வைக்கப்பட்ட போது பார்க்கச் சென்ற தந்தை மற்றும் உறவினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கதிர்காமத்தில் வைத்து அழைத்து துக்கம் விசாரித்ததுடன் பிரேத அடக்க செலவுக்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார்.
கையில் பணமாக 20 ஆயிரம் ரூபாவும் ஏனைய சவப் பெட்டி, பிரயாணம் என்பவற்றையும் ஏற்பாடு செய்து பொலிஸார் கொண்டு சென்று ஒப்படைக்குமாறு ஏற்பாடு செய்ததாக தந்தையார் கூறினார்.
0 commentaires :
Post a Comment