* சிறை கைதிகள் மீது மனித உரிமை மீறல்கள்
* புஷ், டிக்செனி, ட்ரம்ஸ்பீல்ட் மீது விசாரணைக்கு வலியுறுத்தல்
* சர்வதேச விசாரணை அவசியம்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையாயின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ.புஷ்ஷின் காலத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைக் கைதிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் காணப்படும் நிலையில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கும் 107 பக்க இணையத்தள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
டாபூர், லிபியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கூறும் அமெரிக்கா, தனது அதிகாரிகள் நீதிக்கு விரோதமாக நடந்துகொள்ளும் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்க முடியாதென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்ஷின் காலப்பகுதியில் சிறைக்கைதிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு இணங்கிய தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சித் திரவதைக்கு எதிரான சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு தவறியிருப்ப தாகவும் இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப் பட்டவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதி பதி ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ், முன்னாள் உபஜனாதிபதி டிக் செனி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ட்ரம்ஸ் பீல்ட், சீ.ஐ.ஏ. பணிப்பாளர் உள்ளிட்டவர் களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு தனது நாட்டு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா விசாரணைகளை நடத்தாவிட்டால், அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏனைய நாடுகள் சர்வதேச சட் டத்துக்கு அமைய விசாரணைகளை நடத்துவது அவசியமென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை யில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment