கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தெகியத்தகண்டிய பிரதேசத்தில் வாழ்கின்ற ஆதிவாசிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து அவர்களது தேவைகள் மற்றும் அவர்களது பாரம்பரிய முறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். ஆதிவாசிகளின் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களது சம்பிரதாய பூஜை, மற்றும் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டார். அங்குள்ள ஆதிவாசிகளுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் கலந்து கொண.டார்.
0 commentaires :
Post a Comment