7/10/2011

போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்: அமெரிக்கா _

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் என அமெரிக்க பாராளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான இலங்கை இராணுவத்தின் யுத்தத்தின் போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மேற்கு நாடுகள் கோரிக்கை குறித்து கொழும்பு அரசாங்கமும் கவலையடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

அதேவேளை, வன்முறையான இனத்துவ பிரிவினை இயக்கமொன்றுக்கு எதிரான மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிக்கு தலைமை தாங்குவதில் சிங்கள பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார் எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புக்களினதும் பல நாடுகளினதும் கோரிக்கை வீட்டோ அந்தஸ்து இரு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு சபை நிறைவேற்றும் வாய்ப்பு குறைவு எனவும் அவ் வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐ.சி.சி.யை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதற்கு பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபை இவ்விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம். ஏனெனில் அது சிங்கள தேசியவாதிகளின் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கையே அதிகரிக்கச் செய்யும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ___

0 commentaires :

Post a Comment