உலக ஆதிவாசிகள் தின கொண்டாட் டத்தை முன்னிட்டு ஜுலை 30ம், 31ம் திகதிகளில் வாகரை சல்லத்தீவு பிரதேசத்தில் நடைபெறும் ஆதிவாசிகள் விழாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தோ நேற்று முன்தினம் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன்தினம் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த ஆதிவாசிகளின் தலைவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இதன்போது இம்முறை ஆதிவாசிகளின் கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும பரந்து வாழ்கின்ற பல்வேறு குழுக்களைச் சேர்ந்த அனைத்து ஆதிவாசிகளையும் இணைத்துக்
கொள்வதாக வன்னியலெத்தோ தெரிவித்தார். வாகரை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட ஏனைய பல பிரதேசங்களில் வாழ்கின்ற ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தித் தரும்படி இதன்போது வன்னியலெத்தோ ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கரையோர வேடர்கள் என்று குறிப்பிடப்படுகின்ற இவர்கள் கடந்த காலத்தில் புலி பயங்கரவாதிகளின் பிடிக்குள் அகப்பட்டிருந்தனர். இவர்களையும் பலவந்தமாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடச் செய்துள்ளதாகவும் வன்னியலெத்தோ மேலும் தெரிவித்தார்.
இக் கரையோர வேடர் சந்ததியினரின் பாரம்பரி கலாசாரத்தை பாதுகாத்துக் கொடுத்து அவர்கள் ஏனைய தரப்பினரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாவதைத் தடுக்கும்படியும் வன்னியலெத்தோ ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆதிவாசிகள் முகம் கொடுத்துள்ள சிக்கல்கள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
வேடுவ மக்களின் நலனோம்பலுக்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அப் பணத்தின் மூலம் மேற்கொள்ளக் கூடிய பணிகளைப் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அப்பொழுதே விசாரித்ததோடு ஆதிவாசிகளின் சிக்கல்களை அராய்ந்து அறிந்து மூன்று மாதங்களுக்குள் அத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும்படி ஆலோசனை வழங்கினார்.
0 commentaires :
Post a Comment