தற்போது தனித்தனியாக பிரிந்து செயற்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல.
இந்தியா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளினாலும் ஒரு போதும் மீண்டும் இணைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்றார்கள். தமிழ் மக்கள் இன்னும் ரி.என்.ஏ.யை (TNA) நம்பவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்குமட்டுமல்ல எமது நாட்டிற்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.
நாம் கடந்த காலங்களில் அழிந்தது, இழந்தது போதும். பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை ஒற்றுமையோடும், சமாதானத்தோடும் மீளக்கட்டியெழுப்ப முன்வாருங்கள் என கிழக்கு மாகாண தமிழ் மக்களிடம் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான எஸ். சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட வீதிகளை ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய நீலாவணை கடற்கரை வீதி 19 1/2 மில்லியன் செலவில் கார்பட் வீதியாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டப் பணிகள் 3ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் கே. லவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி, அபிவிருத்தி அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வையின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ரீ.எம்.வி.பி கட்சியின் தலைவருமான எஸ். சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம். எஸ். உதுமா லெவ்வை, டாக்டர் ரீ. நவரட்னராஜா, மாகாண சபை உறுப்பினர்களான எஸ். புஸ்பராஜா, பி.பிரசாந்தன், கல்முனை மாநகர மேயர், எஸ். இஸட். எம். மசூர் மெளலானா, அமைச்சின் செயலாளர் ஏ. எச். எம். அன்சார் உட்பட அதிகாரிகள், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், கல்லோயா அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்போது சிங்கள குடியேற்றம் இடம்பெற்றதற்கான எந்தவித ஆதாரபூர்வமான சான்றிதழ்களும், அறிக்கைகளும் கிடையாது.
இது இவ்வாறு இருக்க கிழக்கில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குத் தெரிவித்து தமிழ் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி கிழக்கின் ஒற்றுமையைச் சீர்குலைத்து இனமுறுகலை ஏற்படுத்த ஒருசில தொழிற்சங்கங்களும், அரசியல் வங்குரோத்துடைய அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பொய்ப்பிரசாரம் உண்மைக்குப் புறம்பானது. இவை கண்டிக்கத்தக்க விடயமாகும்.
கிழக்கு மாகாணம் வடக்கை விட வித்தியாசமானது. கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கை ஆள்வதற்கு வட மாகாணத்தவர்கள் தேவையில்லை. கிழக்கில் அதிகமான அரசியல் தலைவர்கள் உள்ளனர். கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீர்குலைக்க யாருக்கும் இடமில்லை.
நாம் கடந்த காலங்களில் இழந்தது போதும், அழிந்தது போதும், நாம்பட்ட துன்பங்கள், துயரங்கள் போதும். எமக்கு இனியும் யுத்தம் வேண்டாம். எமது பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், நிம்மதியாக வாழவேண்டும் இதுதான் எமது நோக்கமாகும். இனியும் மக்களை குழப்பி அரசியல் குளிர்காய்வதற்கும், சர்வதேசத்தில் சுகபோகம் அனுபவிப்பதற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார் முதலமைச்சர்.

0 commentaires :
Post a Comment