7/22/2011

65 உள்@ராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல் 875 பேர் தெரிவு

65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறும்.
ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங் களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 65 உள்ளூராட்சி சபைகளிலும் 2,226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
65 உள்ளூராட்சி சபைகளில் கடுவெல மாநகர சபை, கெஸ்பாவ நகர சபை, மினுவாங்கொட நகர சபை, தலவாக்கலை - லிந்துல நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை, சிலாபம் நகர சபை, எம்பிலிபிட்டிய நகர சபை ஆகியவற்றுடன் 55 பிரதேச சபைகளுக்கும் எதிர்வரும் சனிக்கிழமை (23) தேர்தல் நடைபெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 நகர சபைகள், மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 30 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக 201 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
நுவரெலிய மாவட்டத்தில் தலவாக்கலை - விந்துல நகரசபைக்காக 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 4187 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில் ஆகக்குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தலவாக்கலை - லிந்துல நகர சபையிலேயே பதிவாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் 25 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
25ஆயிரம் அதிகாரிகளில் தெரிவத்தாட்சி அதிகாரிகள், தேர்தல் வாக்களிப்பு நிலைய அதிகாரிகள் எனப் பலர் உள்ளடங்குவதாக அவர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகளில் 90 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
சிறு சிறு சம்பவங்கள் நடந்திருந்தாலும் நிலைமை சுமுகமாக இருக்கிறது. என்றாலும், பாதுகாப்பு பலமாகவே இருக்கிறது; பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டி ருப்பதாகவும் காமினி நவரட்ன கூறினார்.
தேர்தல் நடைபெறும் உள்ளூராட்சி சபைகளின் விபரம் வருமாறு:

கொழும்பு மாவட்டம்
1. கடுவல மா.ந.ச
2. கெஸ்பாவ ந.ச
3. ஹோமாகம பி.ச
கம்பஹா மாவட்டம்
4. மினுவாங்கொட ந.ச
5. அத்தனகல்ல பி.ச
களுத்துறை மாவட்டம்
6. அகலவத்தை பி.ச
கண்டி மாவட்டம்
7. ஹரிஸ்பத்துவ பி.ச
8. அக்குரண பி.ச
9. யட்டிநுவர பி.ச
மாத்தளை மாவட்டம்
10. வெலிகமுவ பி.ச
11. உக்வெல்ல பி.ச
நுவரெலியா மாவட்டம்
12. தலவாக்கலை, லிந்துலை ந.ச
காலி மாவட்டம்
13. எல்பிட்டிய பி.ச
14. பத்தேகம பி.ச
15. அக்மீமன பி.ச
மாத்தறை மாவட்டம்
16. அக்குரஸ்ஸ பி.ச
யாழ்ப்பாண மாவட்டம்
17. வல்வெட்டித்துறை ந.ச
18. பருத்தித்துறை ந.ச
19. சாவகச்சேரி ந.ச
20. காரைநகர் பி.ச
21. ஊர்காவற்துறை பி.ச
22. நெடுந்தீவு பி.ச
23. வேலணை பி.ச
24. வலிகாமம் மேற்கு பி.ச
25. வலிகாமம் வடக்கு பி.ச
26. வலிகாமம் தென்மேற்கு பி.ச
27. வலிகாமம் தெற்கு பி.ச
28. வலிகாமம் கிழக்கு பி.ச
29. வடமராட்சி தென்மேற்கு பி.ச
30. பருத்தித்துறை பி.ச
31. சாவகச்சேரி பி.ச
32. நல்லூர் பி.ச
கிளிநொச்சி மாவட்டம்
33. பச்சிளைபள்ளி பி.ச
34. கராச்சி பி.ச
35. பூநகரி பி.ச
முல்லைத்தீவு மாவட்டம்
36. துணுக்காய் பி.ச
அம்பாறை மாவட்டம்
37. காரைதீவு பி.ச
38. திருக்கோவில் பி.ச
திருகோணமலை மாவட்டம்
39. சேருவில பி.ச
40. கந்தளாய் பி.ச
41. திருகோணமலை பட்டினமும் சூழலும் பி.ச
42. குச்சவெளி பி.ச
குருநாகல் மாவட்டம்
43. கிரிபாவ பி.ச
44. குளியாப்பிட்டிய பி.ச
45. பொல்காவல பி.ச
46. மாவத்தகம பி.ச
புத்தளம் மாவட்டம்
47. சிலாபம் ந.ச
48. நவகத்தேகம பி.ச
49. சிலாபம் பி.ச
50. வென்னப்புவ பி.ச
அநுராதபுரம் மாவட்டம்
51. நுவரகம்பலாத்த மத்தி பி.ச
52. ராஜாங்கனய பி.ச
53. கல்நேவ பி.ச
பொலனறுவை மாவட்டம்
54. எலஹர பி.ச
55. ஹிங்குராக்கொட பி.ச
56. வெலிகந்தை பி.ச
மொனராகல மாவட்டம்
57. சியம்பலாண்டுவ பி.ச
58. மொனராகல பி.ச
இரத்தினபுரி மாவட்டம்
59. எம்பிலிபிட்டிய பி.ச
60. இரத்தினபுரி பி.ச
61. பலாங்கொட பி.ச
62. வெலிகெபொல பி.ச
கேகாலை மாவட்டம்
63. கேகாலை ந.ச
64. வரக்காபொல பி.ச
65. ருவான்வெல்ல பி.ச

0 commentaires :

Post a Comment