7/25/2011

உள்@ராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வெற்றி 65 சபைகளில் 45இன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது

ஐ.தே.க.வின் சகல கோட்டைகளும் வீழ்ந்தன் ஜ.வி.பியும் படுதோல்வி
முல்லைத்தீவில் பிரiஜகள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள்
கிளிநொச்சியில் இரு சபைகள் ஆனந்தசங்கரி வசமாகியது

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 45 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய வாக்கு சரிவுக்கு முகம் கொடுத்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளன.
இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலுள்ள 18 உள்ளூராட்சி சபைகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 02 சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது.
நாட்டிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத் தேர்தலில் 55-60 சதவீதமான வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் செயலகம் நேற்று முன்தினமிரவு அறிவித்தது. இருப்பினும் யாழ்.
மாவட்டத்தில் 46 சதவீதமானோரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 சதவீதமா னோரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 சதவீதமானோரும் இத்தேர்தலில் வாக்க ளித்ததாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் கூறினர். பயங்கரவாதம் முழு மையாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தல் இது என்ப தால் வட பகுதி மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமான முறையில் வாக்களிப்பில் கலந்து கொண்டதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உள்ளூராட்சி சபை களுக்கான வாக்களிப்பு நேற்று முன்தினம் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற போதிலும் முதலாவது தேர் தல் முடிவு இரவு 8.50 மணிக்கு வெளி யானது. என்றாலும் நேற்றுக் வெளியாகியிருந்தன. இத்தேர்தலில் தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கான தேர்தல் முடிவே முதலாவதாக வெளியானது. இதில் ஐ. ம. சு. முன்னணி ஏழு ஆசனங்களைப் பெற்று பெரு வெற்றி அடைந்தது. ஐ. தே. க. வுக்கு இரு ஆசனங்களே இச் சபையில் கிடைத்தன.
இந்த 65 உள்ளூராட்சி சபைகளில் ஒரு மாநகர சபையையும், ஆறு நகர சபைகளையும், 38 பிரதேச சபைகளையும் ஐ. ம. சு. மு. வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று நகர சபைகளையும், 15 பிரதேச சபைகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி இரு பிரதேச சபைகளையும் வெற்றி பெற்று இருக்கின்றன.
இதேநேரம் ஐ. ம. சு. முன்னணி யாழ். குடாநாட்டிலுள்ள நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். குடாநாட்டில் 13 உள்ளூராட்சி சபைகளையும், அம்பாறை மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி சபைகளையும், கிளிநொச்சி, முல்லைதீவு, திருமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு பிரதேச சபைப்படி மூன்று உள்ளூராட்சி சபைகளை வெற்றி பெற்றுள்ளது.
இத்தேர்தலில் ஐ. ம. சு. மு. ஹோமாகம பிரதேச சபையை 52 ஆயிரத்து 197 மேலதிக வாக்குகளாலும், கடுவெல மாநகர சபையை 39 ஆயிரத்து 90 மேலதிக வாக்குகளாலும், அத்தனகலை பிரதேச சபையை 36 ஆயிரத்து 239 மேலதிக வாக்குகளாலும், வராக்கபொல பிரதேச சபையை 25 ஆயிரத்து 120 மேலதிக வாக்குகளாலும், வென்னப்புவ பிரதேச சபையை 19 ஆயிரத்து 147 மேலதிக வாக்குகளாலும் வெற்றி பெற்றுள்ளது.
அத்தோடு ஆறு உள்ளூராட்சி சபைகளை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளாலும், 12 சபைகளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகள் வீதத்திலும் ஐ. ம. சு. முன்னணி கைப்பற்றி இருக்கின்றது.
இலங்கை தமிழரசு கட்சி இரண்டு சபைகளையே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த உள்ளூ ராட்சி சபைகளுக்கென 875 பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இத் தேர்தலில் 5688 பேர் அபேட்சகர்களாகப் போட்டி யிட்டனர். இவர்களில் ஐ. ம. சு. சார்பில் 512 பிரதிநிதிகளும், இல ங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 183 பிரதிநிதிகளும், ஐ. தே. க. சார்பில் 137 பிரதிநிதிகளும், ஜே. வி. பி. சார்பில் 13 பிரதிநிதிகளும், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் 12 பிரதிநிதிகளும், ஸ்ரீல. மு. கா. சார்பில் 7 பிரதிநிதிகளும், பிரஜை கள் முன்னணி சார்பில் 2 பிரதிநிதி களும், ல. ச. ச. கட்சி சார்பில் ஒரு பிரதி நிதியும், சுயேச்சை குழுக்கள் சார் பில் 8 பிரதிநிதிகளும் தெரிவாகி யுள்ள னர். காலை 6.40 மணியளவில் சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

0 commentaires :

Post a Comment