7/15/2011

விசேட பயிற்ச்சிக்காக இந்தியா செல்வதற்கு 40விதவைகள் தெரிவு

கிழக்கு மாகாணசபையில் யுத்தத்தாலும், வன்செயலாலும் கணவனை இழந்து தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்ற விதவைகளுக்காக கிழக்கு மாகாணசபை விசேட செயற்த்திட்டம் ஒன்றை நடைமுறை படுத்தியுள்ளது. இந்திய சேவா பெண்கள் அமைப்பிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையிலான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நேற்று கொழும்பில் இடம் பெற்றது. இதன் போது கிழக்கு மாகாணத்திலே கணவனை இழந்த விதவைகளுக்கு சுயதொழில் பயிற்ச்சி நெறிகளை வழங்கும் முகமாக முதல்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச பிரிவுகளிலிருந்தும் 40பயிற்ச்சி நெறியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நேரடியாக இந்தியா சென்று தொழில் பயிற்ச்சி நெறிகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள். குறித்த 3மாத காலத்திற்குள் இவர்களது பயிற்ச்சி நெறி முடிவுற்றதும் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 800விதவைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்ச்சி பெற்ற 40ஆசிரியர்களுடாக இவர்களுக்கான தொழில் பயிற்ச்சி வழங்கப்படும். இவ் தொழில் பயிற்ச்சி நெறியில் உணவு பதனிடுதல், ஆடைகளுக்கான ஆபரணங்களும் மற்றும் கைப்பணி பொருட்களுக்கான பயிற்சிகளும் உள்ளடங்கும்.
மேற்படி செயற்த்திட்டமானது கிழக்கு மாகாணத்தில் 5ஆண்டுகள் செயற்பட இருக்கின்றது. இந்த 5ஆண்டுகால பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான விதவைகளின் வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாடு என்பன உயர்வு பெறும் என்பது திண்ணம். மேற்படி செயற்த்திட்டமானது முழுமையாக கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுடன் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி செயற்த்திட்டம் தொடர்பான உடன்படிக்கை கிழக்கு மாகாணத்திற்கும் இவ் அமைப்பிற்கும் இடையில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment